உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா ரூ.20 லட்சம் கோடி செலவு: மத்திய அமைச்சர்

எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா ரூ.20 லட்சம் கோடி செலவு: மத்திய அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' புதைவடிவ எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியா 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறது,'' என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

காற்று மாசு

டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: நான் டில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருந்த போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொற்று ஏற்பட்டது. டில்லி முழுவதும் மாசுபாடு காணப்படுகிறது. நான் போக்குவரத்து அமைச்சர். காற்று மாசு ஏற்பட 40 சதவீத காரணம் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட புதைவடிவ எரிபொருட்கள் தான் காரணம்.

செலவு

புதைபடிவ எரிபொருளுக்காக ஆண்டுதோறும் 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்கிறோம். இது என்ன வகையான தேசபக்தி. இந்த நாட்டில் புதைபடிவ எரிபொருளுக்காக 20 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்து மாசுபாட்டை இறக்குமதி செய்கிறோம். நம்மால் ஒரு மாற்று இந்தியாவை உருவாக்க முடியாதா?

விவசாயிகளின் பங்கு

உள்நாட்டில் சுத்தமான மாற்று எரிபொருளை தயார் செய்யும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இதில் விவசாயிகளின் பங்கு அதிகரித்து வருகிறது. விவசாயிகளின் பணி இனிமேல் உணவு உற்பத்தியுடன் முடிவடைந்துவிடாது. விவசாயிகள், எரிசக்தி உற்பத்தியாளராக முடியும். எரிபொருள் வழங்குபவராகவும், விமான எரிபொருளை வழங்குபவராகவும் முடியும். தற்போது அது நடந்து வருகிறது. இவ்வாறு கட்கரி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
டிச 24, 2025 18:14

நிதின் போன்று அதிகாரத்தில் உள்ள நபர் புலம்ப கூடாது. இறக்குமதிக்கு 20 லட்சம் கோடி ரூபாய். அந்நிய செலாவணி தேவை. 25 சதவீதமான அந்நிய செலாவணி ஈட்டும் நபருக்கு மானிய விலை. மற்றவருக்கு அடக்க விலை. 100 சதவீத வரி விலக்கு நிறுத்தம். 1 சதவீத முதல் வரி துவக்கம். 10 ஹெக்டேர் நிலம் கீழ் கூட்டுறவு விவசாயம். காலி, தரிசு நிலம் கைபற்றி விவசாயம் தெரிந்த நபருக்கு அரசு குத்தகைக்கு விட வேண்டும். சீர் கெட்ட மாநில சாலை எடுத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசம் கட்டணம் வசூல் செய்ய கொடுக்க வேண்டும். டெல்லி மாசுக்கு ஆடம்பரம் விரும்பும் மக்கள் முதல் காரணம்


ஆரூர் ரங்
டிச 24, 2025 16:20

சோலார் போட்டு கனெக்ஷன் பர்மிஷன் வாங்க நிறைய வாரிய ஆட்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? உங்க மானியத்துக்கும் அதிகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை