உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாக்.,கிற்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் அடுத்த திட்டம்!

பாக்.,கிற்கு நெருக்கடி ஏற்படுத்த மத்திய அரசின் அடுத்த திட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அனைத்து கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை, வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.காஷ்மீரின் பஹல்காமின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, கடந்த 7 முதல் 10 ம் தேதி வரை நடந்த இந்தியா - பாகிஸ்தான் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நீடித்தது. இது உலக நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தின. கடந்த 10 ம் தேதி பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ வேண்டுகோளை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா சம்மதித்தது. பிறகு, பல்வேறு நாட்டு தூதர்கள், தூதரக அதிகாரிகள், பிரதிநிதிகள், பாதுகாப்பு அதிகாரிகளிடம் மத்திய வெளியுறவுத்துறை செயலர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சந்தித்து இந்தியாவின் நடவடிக்கை குறித்து விளக்கமளித்தனர். இந்நிலையில், அடுத்த கட்டமாக பாகிஸ்தானுக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில் நடந்த மோதல், இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வெளிநாடுகளுக்கு நேரில் விளக்கம் அளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரும் 22ம் தேதிக்கு பிறகு இந்த பயணம் இருக்கும். மூத்த எம்.பி.,க்கள் இக்குழுவிற்கு தலைமை தாங்க உள்ளனர். இக்குழுவில் 5 முதல் 6 எம்.பி.,க்கள் இடம்பெறுவார்கள். இந்த பயணத்திற்கான ஏற்பாடுகளை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஏற்பாடு செய்து வருகிறார். அமெரிக்கா, பிரிட்டன், தென் ஆப்ரிக்கா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமீரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு எம்.பி.,க்கள் குழுவினர் செல்ல உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Giri V S
மே 17, 2025 09:09

சசிதரூரின் சேர்ப்பு குழுவுக்கு பலம் சேர்க்கும்.


SUBBU,MADURAI
மே 17, 2025 13:53

பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், மோடியின் மத்திய அரசுக்கும் இந்த நாட்டுக்கும் எப்படி நெருக்கடி கொடுப்பது என்று திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார் வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த பிள்ளையான ராகுல்காந்தி.


Sadananthan Ck
மே 17, 2025 07:46

எதிர்க்கட்சி எம்பிக்களை அனுப்பாமல் இருப்பதே நல்லது ஏனென்றால் இவர்கள் சேம் சைடு கோல் அடிப்பார்கள் ஆகவே எம்பிக்களுக்கு பதிலாக அரசு அதிகாரிகளை அனுப்பலாம்


Anbuselvan
மே 16, 2025 21:46

திமுக சார்பில் கனிமொழி அவர்கள் செல்வார் என ஊடக செய்திகள் கூறுகின்றன


Natarajan Ramanathan
மே 16, 2025 20:58

இந்த குழுவில் இடம்பெற பீமுக எம்பீக்கள் முயற்சி செய்வார்கள். குருமாகூட முயற்சி செய்வார். ஐந்து துலுக்க எம்பீக்களை அனுப்புவது நல்லது.


Anbuselvan
மே 16, 2025 21:26

தமிழ்நாடு புறக்கணிக்கப் படுகிறது என்கிற போலி புலம்பலை ஆரம்பித்து விடுவார்கள்


Balakrishnan karuppannan
மே 16, 2025 20:31

தயவு செய்து ராகுல் வேண்டாம்...


Sivagiri
மே 16, 2025 20:26

கனி ? ,


SENTHIL NATHAN
மே 16, 2025 19:06

தேவையற்ற திட்டம்.


V Venkatachalam
மே 16, 2025 18:42

இந்த குழு வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்து இந்திய நடவடிக்கைகள் பற்றி எடுத்து சொல்லிவிட்டு திரும்பி வருவதற்குள் பாகிஸ்தான் அதாவது பாதிஸ்தான் காணாமல் போய்விடும்.


ரொம்ப சிறப்பு
மே 16, 2025 18:07

எல்லா எதிர்க்கட்சி MP களையும் வெளி நாடு அனுப்பிட்டு. முக்கிய மசோதா தாக்கல் செய்யலாம்.


Naga Subramanian
மே 16, 2025 17:50

காங்கிரஸ் எம்பி தவிர வேறு யாரையும் சேர்க்கக் கூடாது. நிச்சயமாக சசி தரூர் இருக்க வேண்டும்.