உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம்

லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எல்லையில் ரோந்து பணி தொடர்பாக சீன ராணுவத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், லடாக் எல்லையில் அமைந்துள்ள டெம்சோக் பகுதியில் இந்திய ராணுவம், ரோந்து பணியை துவக்கியது. பெட்சாங் பகுதியில் விரைவில் இந்த பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கிழக்கு லடாக்கில், 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கு இடையே உறவு முற்றிலும் சீர்குலைந்தது. பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சிகளை இருநாட்டு அரசுகளும் தொடர்ந்து மேற்கொண்டன. ராணுவ அதிகாரிகள் தொடர் பேச்சு நடத்தினர். அதனால், சில நாட்களுக்கு முன்னர் படைகள் ரோந்து செல்வது தொடர்பாக இரு நாட்டு ராணுவத்தினர் இடையே உடன்பாடு ஏற்பட்டது. படைகளை திரும்ப பெற்றுக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jmta4tr1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், கிழக்கு லடாக்கின் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் படையினர் வாபஸ் பெறப்பட்டனர். இது சுமூகமாக முடிந்தது. ரோந்து முறைகள் தொடர்பாக கீழ்மட்ட தளபதிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.எல்லையில் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரு நாட்டு படையினரும் எல்லையில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.இந்நிலையில், டெம்சோக் செக்டார் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்து பணியை துவக்கினர். பெட்சாங் பகுதியில் விரைவில் ரோந்து பணி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
நவ 01, 2024 19:58

லடாக் எல்லையில் ரோந்து பணியை துவக்கியது இந்திய ராணுவம். தீபாவளி பண்டிகையை மக்கள் நாடெங்கும் நிம்மதியாக கொண்டாட இவர்கள் ஆற்றும் பணி ஈடுசெய்யமுடியாத ஒரு பணி . மக்களுக்காக அவர்கள் தங்கள் குடும்பத்தைவிட்டு அங்கே ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் என்றென்றும் அந்த ராணுவவீரர்களுக்கு நன்றிக்கடன் படவேண்டும். அசிங்க அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் ஒருமுறையாவது எல்லைப்பகுதிக்கு சென்று அவர்களுக்கு உதவி செய்திடவேண்டும். வாழ்நாளில் ஒருமுறையாவது.


aaruthirumalai
நவ 01, 2024 17:52

சைனாவிடம் கவனமாக இருக்க வேண்டும்.


அப்பாவி
நவ 01, 2024 17:08

ரெண்டு பக்கமும் அடிச்சிக்காம அன்போடு ரோந்து போகணும். இங்கே சீன இறக்குமதி அதிகரிக்கணும்.


Sakthi,sivagangai
நவ 01, 2024 17:55

நீ மாட்டியிருக்க பல் செட்டு கூட சீன தயாரிப்பு தானா?


Thirumal Kumaresan
நவ 01, 2024 16:35

நல்ல செயல் பாராட்டுக்கள் இரு நாட்டினருக்கும்.ஜெய் ஹிந்த்


karthik
நவ 01, 2024 16:14

இதெல்லாம் எவ்வளவு பெரிய சாதனை தெரியுமா? சீன எல்லையில் உள்கட்டமைப்பை உருவாக்கினால் சீனா கோவித்துக்கொள்ளும் என்று சொன்னவர்கள் காங்கிரஸ் கட்சிக்காரர்கள்.. அவர்களால் எத்தனை எத்தனை பிரச்சனைகள் உருவாகின நாட்டில்.. காங்கிரஸ் ஆட்சியில் தீர்ந்தது என்று ஒரு பிரச்னையாவது சொல்ல முடியுமா? காங்கிரஸ் ஆட்சியில் உருவாகிய பிரச்சனைகள் என்று வேண்டுமானால் பல விஷயங்களை காட்டலாம். மோடி என்றொரு மனிதர் மட்டும் வரமால் போயிருந்தால் இந்நேரம் லெபனான் போல மாறி இருக்கும் இந்திய.. மோடி வந்தது எல்லாம் நன்மைக்கே.


புதிய வீடியோ