உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளை அவர்கள் மண்ணிலேயே அழிக்கும் இந்தியப் படைகள்: பிரதமர் மோடி

பயங்கரவாதிகளை அவர்கள் மண்ணிலேயே அழிக்கும் இந்தியப் படைகள்: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ரிஷிகேஷ்: ‛‛ பயங்கரவாதிகளை அவர்களது மண்ணிலேயே இந்தியப் படைகள் அழிக்கின்றனர்'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது: வலிமையான அரசு அமைவதன் மூலம் கிடைக்கும் பலன்களை பார்த்து மீண்டும் மோடி ஆட்சி அமைய உள்ளது என மக்கள் பேசி வருகின்றனர். பலவீனமான மற்றும் நிலையற்ற அரசு அமையும் போது, எதிரிகள் பலம் பெறுவதுடன் பயங்கரவாதம் பரவுகிறது. ஆனால், வலிமையான அரசின் கீழ், நமது படைகள், பயங்கரவாதிகளை அவர்களது மண்ணிலேயே அழிக்கின்றனர்.ஊழல்வாதிகள் நாட்டை கொள்ளையடிப்பதை தடுத்து நிறுத்தி உள்ளேன். இதனால் என் மீது அவர்களின் கோபம் அதிகரித்து உள்ளது. பலவீனமான முந்தைய காங்கிரஸ் அரசு எல்லைப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்தவில்லை. ஆனால், தற்போது எல்லையில் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Duruvesan
ஏப் 11, 2024 21:38

பக்கிஸ், கனடா, அமெரிக்கா எல்லோரும் ஏற்கனவே நாம தான் கொல்றம்னு சொல்றாங்க, இது வாக்கு மூலம் போல இருக்கு, தேவையா மோடி ஜி


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை