உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு வலுவாக உள்ளது: ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு

இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு வலுவாக உள்ளது: ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: 'இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு, இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது' என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறினார்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த கருத்தரங்கில், சக்திகாந்த தாஸ் பேசியதாவது: சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்ததால், உத்தரவாதம் இல்லாத கடன்கள் வாங்குவது குறைந்துள்ளது. நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பெரிய சிக்கலை உருவாக்கி இருக்கலாம். தற்போது சீராக உள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது 29 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைந்துள்ளது.இந்தியாவின் உள்நாட்டு நிதி அமைப்பு இப்போது மிகவும் வலுவான நிலையில் உள்ளது. இந்த நிதியாண்டில், சிறப்பாக செயல்பட்ட வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். உலகம் மாறிக்கொண்டே இருக்கிறது. சவால்கள் மற்றும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த மூலையிலிருந்தும் பிரச்னைகள் உருவாகும் சூழல் நிலவுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Kannan Soundarapandian
ஜூன் 20, 2024 17:50

ரிசர்வ் வங்கியின் கவர்னர் சரியான புள்ளி விவரம் இல்லாமல் மேலோட்டமாக பேசுகிறார். நிதி நிறுவனங்களுக்கு கொடுக்கும் கடன்களை சுத்தமாக நிறுத்த வேண்டும்.


pandi
ஜூன் 20, 2024 17:06

அம்பானியும் அதானியும் நல்ல நிதி நிலையில் உள்ளனர், மற்றவர்கள் மோசமான நிதி நிலையில் உள்ளனர்


P. SRINIVASALU
ஜூன் 20, 2024 15:27

இந்த பிஜேபிருக்கும்வரை உண்மையான நிதிநிலைஅறிக்கை வெளியில் வராது. எல்லாம் பொய் அறிக்கைகள்.


Narayanan Muthu
ஜூன் 20, 2024 13:36

யாரிடம் நண்பர்களிடமா


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2024 14:32

கோபாலபுரத்தில்


N Sasikumar Yadhav
ஜூன் 20, 2024 13:22

நிதி நன்றாக இருப்பதால்தான் புள்ளிராஜா இன்டி கூட்டணி யுவாராஜி பணத்தை அள்ளி வழங்க சபதம் செய்தாரோ என்னவோ


மேலும் செய்திகள்





புதிய வீடியோ