உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரட்டை இன்ஜின்… மணிக்கு 2,500 கிமீ வேகம்; உள்நாட்டில் தயாராகும் 5ம் தலைமுறை போர் விமானம்

இரட்டை இன்ஜின்… மணிக்கு 2,500 கிமீ வேகம்; உள்நாட்டில் தயாராகும் 5ம் தலைமுறை போர் விமானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உள்நாட்டிலேயே 5ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்கும் உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்திய நிறுவனங்களுக்கு அதிகாரப்பூர்வமாக டிஆர்டிஓ வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாதுகாப்புத்துறையில் சுயசார்பு என்ற இலக்கை நோக்கிய நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இந்த நிலையில், டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மேம்பட்ட நடுத்தர ஏவுகணை மற்றும் பிரளய ஏவுகணைக்காக உருவாக்கப்பட்ட முக்கிய உள்நாட்டு தொழில்நுட்பங்களை இந்தியத் தொழிற்சாலைகளுக்கு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது. இதன்மூலம், இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தித் திறனை பல மடங்கு உயர்த்தும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகளின் வேகம் மற்றும் கட்டமைப்பு வலிமை அதிகரிக்கப்படும். வெளிநாட்டு சார்பில்லாமல், உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு மணிக்கு 2,500 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன்கள் கொண்ட இரட்டை இன்ஜின்களைக் கொண்ட போர் விமானம் தயாரிக்க உதவும். 10 மணி நேரம் தொடர்ந்து பறக்கும் தன்மை கொண்டுள்ள இந்த விமானம், தொலைதூர தாக்குதலை நடத்தும் திறன் கொண்டது. இந்த அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட மேம்பட்ட நடுத்தர ஏவுகணைகள், அமெரிக்காவின் எப்35 மற்றும் சீன போர் விமானங்களை மிஞ்சிய செயல்திறன் மற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

cpv s
நவ 24, 2025 11:16

HAL must be handed over to private hand , then the out put will come otherwise no output or very slow out because government job


ஜெய்ஹிந்த்புரம்
நவ 24, 2025 11:14

வெளிநாட்டு சார்பில்லாமல், உள்நாட்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு மணிக்கு 2,500 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன்கள் கொண்ட இரட்டை இன்ஜின்களைக் கொண்ட போர் விமானம் தயாரிக்க உதவும். - வாயாலே வடை சுட்டார்கள், இப்போது 2 மாக் ஸபீடில் ஜெட் விடுறாங்களா? மேலே சொன்னது நெசம் என்றால் தேஜஸ் குட்டி விமானத்துக்கு எஞ்சினை அமெரிக்காவிடம் இருந்து ஏன் இறக்குமதி செய்ய வேண்டும்?


Maruthu Pandi
நவ 24, 2025 10:56

நாம் இந்த விமானத்தை ரேஅதுய பண்ணும்போது 7ம் தலை முறை விமானம் சீனா உபயோகிக்க கூடும் . அமெரிக்காவில் இருந்து ஜெட் என்ஜின் வாங்கி அதை உள்நாட்டில் வடிவமைக்க நாம் எடுத்துக்கொண்ட காலம் சுமார் 35 வருடங்கள் . HAL போன்ற அரசு ன்இருவனங்கள் இதற்க்கு லாயக்கு இல்லை என தெரிந்து கொண்டோம் .இனி இப்படி மாடர்ன் விமானங்கள் தயாரிக்க வேண்டுமெனில் நாம் அதானி , எல் அண்ட் டீ , போன்ற நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுத்து செய்யலாம் . அல்லது ரஷ்யா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ருந்து முன்பு போல வாங்குவதே சிறந்தது .


ஜெய்ஹிந்த்புரம்
நவ 24, 2025 11:18

அதானி குழுமம் இஞ்சினை முழுசா இறக்குமதி பண்ணி மேட் இன் இந்தியா ஸ்டிக்கரை ஒட்டி வரிச்சலுகையை ஆட்டைய போட்டு, போலி இன்வாய்ஸ் போட்டு 1000% விலையேற்றி மிளகாய் அரைக்கும்.


Anand
நவ 24, 2025 10:41

வாழ்த்துக்கள்.


Rangarajan Cv
நவ 24, 2025 10:07

Muscle power of DRDO - full credit to Dr. Abdul Kalam- visionary, eho visualized


Barakat Ali
நவ 24, 2025 09:45

பலே ..........


Ramesh Trichy
நவ 24, 2025 09:11

வாழ்த்துகள், விரைவு படுத்துவது மிகவும் முக்கியம். எப்படியும் 8 முதல் 10 ஆண்டுகள் ஆகும்.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை