| ADDED : மே 06, 2025 10:24 PM
புதுடில்லி: '' இந்தியாவின் தண்ணீர் , நமது நாட்டின் நலன்களுக்கே பயன்படுத்தப்படும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமான ஒன்று சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து நடவடிக்கை. இதற்கு பாகிஸ்தான் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q5qlsdqe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பேசியதாவது: சமீப நாட்களாக தண்ணீர் குறித்து மீடியாக்கள் அதிகம் பேசி வருகின்றன. முன்பு, இந்தியாவிற்கு சொந்தமான தண்ணீர், நாட்டிற்கு வெளியே பாய்ந்தது. ஆனால், இனிமேல், இந்தியாவின் தண்ணீர், இந்தியாவின் நலன்களுக்கே பாயும். அது இந்தியாவின் நலன்களுக்கு பாதுகாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.