உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காலிஸ்தான் விவகாரத்தில் பிரிட்டன் அலட்சியம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து

காலிஸ்தான் விவகாரத்தில் பிரிட்டன் அலட்சியம்: வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' லண்டனில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்க முயன்றது, பிரட்டனின் அலட்சியத்தை காட்டுகிறது'', என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.பிரிட்டனின் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் திரும்பிய போது, அங்கு கூடியிருந்த காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் ஒருவர், அமைச்சரின் காரை நோக்கி பாய்ந்து அவரை தாக்க முயன்றார். மேலும் மூவர்ணக் கொடியை கிழித்து அவமதித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்து இருந்தது.இச்சம்பவம் தொடர்பாக டில்லியில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: லண்டனில் நடந்த சம்பவம், அந்நாட்டின் அலட்சியத்தை காட்டுகிறது. பிரிட்டனில் செயல்படும் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறியது தொடர்பாக இந்தியா தனது கவலையை பிரிட்டனிடம் தெரிவித்து உள்ளது.இச்சம்பவத்தில் பெரியளவில் உள்ள சூழலை புரிந்து கொள்வது அவசியம். அத்தகைய சக்திகளுக்கு உள்ள சுதந்திரம் மற்றும் பிரிட்டனின் அலட்சியத்தையும் காட்டுகிறது. பிரிட்டனில் நமது ராஜ தந்திர நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் அவர்களது மிரட்டல்கள் மற்றும் நடவடிக்கைகள் உள்ளன.இந்த விவகாரத்தில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையை நாங்கள் பார்த்து உள்ளோம். இச்சம்பவம் மற்றும் இதற்கு முன்பு நடந்த சம்பவங்களுக்கு காரணமான குற்றவாளிகள் மீது அந்நாடு எடுக்கும் நடவடிக்கையை வைத்து மட்டுமே அந்நாட்டின் நேர்மையை கணிக்க முடியும் என்பது எங்களின் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

अपावी
மார் 08, 2025 10:52

நாம எதுக்கு அங்கே போகணும்?


கண்ணன்
மார் 08, 2025 09:53

எவ்வளவுதான் பட்டாலும் திருந்ததாதவர்கள் இந்த இங்கிலாந்தியர்கள் அவர்கள் இன்னும் நன்றாக அனுபவிக்க வேண்டும்


J.V. Iyer
மார் 08, 2025 05:26

இதையே இந்தியாவுக்கு வரும் வெள்ளை பறங்கியர்களுக்கு மக்கள் செய்தால்? பன்றிஸ்தானிடமிருந்து POK பகுதிகளை மீட்டதற்குபின், ப்ரிட்டனிடமிருந்து அவர்கள் கொள்ளை அடித்த நூறு டிரில்லியன் பவுண்ட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் கொஹினுர் வைரத்தையும் மீட்க மக்கள் போராடவேண்டும்.


Appa V
மார் 08, 2025 00:23

கனடா அமெரிக்க மற்றும் இங்கிலாந்திலும் 200 டாலர் பவுண்டு உபிஸ் நிறைய இருக்காங்க


MARUTHU PANDIAR
மார் 07, 2025 22:00

இதெல்லாம் தலைக்கு மேல போய் விட்ட வெள்ளம் ..கனடா ஆகட்டும், பிரிட்டன் ஆகட்டும் இவை எல்லாம் இப்போது மத வெறியர்களிடமும், பிரிவினை சக்திகளிடமும் மண்டியிட்டு தான் காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்காங்க,,, முதலில் அலட்சியமாக இருந்து விட்டதன் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். நம்ம நாட்டுலயும் மர்ம நபர்கள் ஆட்டி வைக்க வில்லையா ?


SUBBU,MADURAI
மார் 07, 2025 21:31

The entire Europe including London has been captured by Muslim refugees and Khalistani, in which expectation of action from the UK government will be meaningless. UK is on a complete self destruction mode and has become more unsafe than Pakistan at this time. Europe is going to be threatened with total domination by millions of hostile Muslim migrants.


சமீபத்திய செய்தி