உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு இந்திய டி.என்.ஏ: டில்லியில் தடபுடல் விருந்தில் இந்தோனேசியா அதிபர் பேச்சால் சிரிப்பலை!

எனக்கு இந்திய டி.என்.ஏ: டில்லியில் தடபுடல் விருந்தில் இந்தோனேசியா அதிபர் பேச்சால் சிரிப்பலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருந்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, 'எனக்கு இந்திய டி.என்.ஏ., உள்ளது' என பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.டில்லியில் நடந்த குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், இந்தோனேசியா அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று விருந்து நடந்தது. இந்தோனேசியா அதிபருக்கு மரியாதை நிமித்தமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளித்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g3vnf91b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்பு விருந்தில் சுபியாண்டோ பேசியதாவது: சில வாரங்களுக்கு முன்பு, டி.என்.ஏ., சோதனை செய்தேன். அவர்கள் என்னிடம் இந்திய டி.என்.ஏ., உள்ளது என்று சொன்னார்கள். நான் இந்திய இசையைக் கேட்டவுடன், நான் நடனமாடத் தொடங்குகிறேன். இந்தியாவும், இந்தோனேசியாவும் நீண்ட, பழமையான வரலாற்றில் ஒற்றுமை உள்ளன.எங்களிடம் நாகரீக ஒற்றுமை உள்ளன. இப்போதும் கூட நமது மொழியின் மிக முக்கியமான பகுதி சமஸ்கிருதத்திலிருந்து வருகிறது. இந்தோனேசியாவின் பல பெயர்கள் சமஸ்கிருதம் மொழியில் உள்ளன. இது நமது பண்டைக்கால ஒற்றுமை என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். அவரது பேச்சு சிரிப்பலையை வரவழைத்தது. இந்த விருந்தில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

GoK
ஜன 27, 2025 12:28

தமிழ்நாட்டின் மணமகனே இதை சும்மா விடலாமா? உடனே உங்கள் திராவிட சேனையை அனுப்பி அங்கே போயி ஒரு ரவுசு கிளப்பிட்டு வரச்சொல்லுங்க இளவலை அனுப்பலாம் ...


ராஜா
ஜன 27, 2025 12:11

இதுல என்ன சிரிப்பு. உண்மைதான் அவர் பேசியது


Sundar R
ஜன 27, 2025 10:44

இந்தோனேஷிய அதிபர் சொல்வது மிகவும் சரியானது. பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழிகளில் சமஸ்கிருதம் இரண்டறக் கலந்திருக்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 27, 2025 11:11

கடல்கடந்து சென்று நமது கலாச்சாரத்தைப் பரப்பிய மூவேந்தர்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் பிராம்மணர்கள்.. இதுவும் காரணமாக இருக்கலாம் .....


Barakat Ali
ஜன 27, 2025 08:40

ஆரியர், திராவிடர், ஆசியர், வெள்ளையர் அனைவருக்கும் ஆதி ஆப்பிரிக்கர்களே .....


Ganesh Subbarao
ஜன 27, 2025 11:29

கல் தோன்றி முன்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் இல்லையா?


அப்பாவி
ஜன 27, 2025 07:59

சாப்புடுங்கோ... நீங்க சாப்புட்டா 140 கோடி பேரும் சாப்புட்ட மாதிரி. நேத்திக்கி வயறு ரொம்பின மாதிரி இருந்திச்சு.


Ganesh Subbarao
ஜன 27, 2025 11:32

கொத்தடிமைகளுக்கு அப்படித்தான் இருக்கும் ...


N.Purushothaman
ஜன 27, 2025 12:34

அப்படியா திமிங்கலம்? விடியா முதல்வர் மதுரைக்கு நேத்து போனப்போ ஓசிக்கு குவாட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிட்ட ஆளா இருப்பீங்க போல....


Kasimani Baskaran
ஜன 27, 2025 07:30

ஜாதியில்லை, சண்டையில். மொத்த இந்தோனேசியாவும் மதம் மாறிய பின்னரும் கூட


இவன்
ஜன 27, 2025 08:02

அவனுங்க மதத்தை கடை புடிக்க மாட்டானுங்க உபிஸ்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை