உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னிய மண்ணில் அரசியலமைப்பை அவமதிப்பது பொறுப்பற்ற பேச்சு!: ராகுலின் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

அன்னிய மண்ணில் அரசியலமைப்பை அவமதிப்பது பொறுப்பற்ற பேச்சு!: ராகுலின் கருத்துக்கு துணை ஜனாதிபதி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: ''அரசியலமைப்பு பதவி வகிக்கும் ஒருவர், நம் நாட்டில் இடஒதுக்கீடுகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று வெளிநாட்டு மண்ணில் பேசுவது, அரசியலமைப்புக்கு எதிரான அவரது மனநிலையை காட்டுகிறது,'' என, ராகுலின் அமெரிக்க பேச்சை மறைமுகமாக குறிப்பிட்டு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம் தெரிவித்தார்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சமீபத்தில் அமெரிக்கா சென்றபோது, 'இந்தியா உயர்ந்த இடத்தை அடையும்போது, இடஒதுக்கீடுகளை காங்கிரஸ் முற்றிலுமாக ஒழிக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அதற்கு சாதகமாக இல்லை' என, தெரிவித்தார். இதற்கு, நம் நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதை தொடர்ந்து, 'நான் இடஒதுக்கீட்டுக்கு எதிரானவன் என்பதாக என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுஉள்ளது. 'இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் நாங்கள் உயர்த்துவோம் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறேன்' என, சமாளித்தார்.இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், ராகுலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவரது பேச்சை கடுமையாக விமர்சித்தார்.அவர் பேசியதாவது:இடஒதுக்கீடு என்பது தகுதிக்கு எதிரானது அல்ல. அது அரசியலமைப்பின் ஆன்மா. ஒருவரது வாய்ப்பைப் பறிப்பதல்ல, மாறாக சமுதாயத்தின் வலிமையான துாண்களாக இருப்பவர்களைக் கைப்பிடித்து துாக்கிவிடும் முயற்சி. அப்படி இருக்கையில், அரசியலமைப்பு பதவி வகிக்கும் தலைவர் ஒருவர், தன் சமீபத்திய வெளிநாடு பயணத்தில், 'இடஒதுக்கீட்டை ஒழிப்போம்' என, பேசியுள்ளார். இது, அரசியலமைப்புக்கு எதிரான அவரது மனநிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது, அரசியலமைப்பை மதிப்பது போன்ற கடமைகளைப் பின்பற்றுவதற்காக தான் வெளிநாட்டு பயணம். மாறாக, அரசியலமைப்புச் சட்டத்தை பகிரங்கமாக அவமதிப்பதற்காக அல்ல.அரசியல் சாசனத்தை துாக்கி பிடித்து காட்டினால் மட்டும் போதாது. அதை மதிப்பதும், படித்து புரிந்து கொள்வதும் அவசியம். அரசியலமைப்பு பதவி வகிக்கும் ஒருவர் இந்திய எதிர்ப்பு பேச்சுகளை அன்னிய மண்ணில் தொடர்ச்சியாக பேசி வருகிறார். நம் தாய் நாட்டை காயப்படுத்தும் இது போன்ற செயல்களை இளைஞர்கள் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அரசியலமைப்பின் முழு அதிகாரம் பெற்ற நபர், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுக்கிறார். அதை கட்டாயம் நடத்த வேண்டும் என மற்றொருவர் வலியுறுத்துவதுடன், எஸ்.சி., - எஸ்.டி., - ஓ.பி.சி.,க்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்க கூடாது என்றும் கூறுகிறார். துணை ஜனாதிபதி எதை ஆதரிக்கிறார்? ஜெய்ராம் ரமேஷ், பொதுச்செயலர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

R.RAMACHANDRAN
செப் 16, 2024 14:19

இந்த நாட்டின் துணை குடியரசுத் தலைவராக இருந்து கொண்டு வாக்கு வங்கிக்காக அரசியல் தலைவர்கள் பேசுவதை போல பேசி இன்னும் உயர் பதவி அடைய முயற்சிக்கிறார். இந்த நாட்டில் உள்ளவர்களே சூழ்ச்சியாக ஏன் அரிஜனங்களுக்கு இட ஒதுக்கீடு அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளதால் தகுதியானவர்கள் அரசு பனி பெற முடியவில்லை என ஏமாற்றுகின்றனர். இதே பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதோடு தற்போது பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு உள்ளது குறித்து கேள்வி கேட்பதில்லை.அப்படிப்பட்ட நிலையில் அயல்நாட்டில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பியதற்கு இட ஒதுக்கீடு தொடரும் உரிய காலத்தில் ஐடா ஒதுக்கீடு முடிவிற்கு கொண்டு வரப்படும்,அது தற்போது அல்ல எனக் கூறியதை எப்படியெல்லாம் திரித்து முடக்கப் பார்க்கின்றனர். அந்த ஒரு நபர் குரல் கொடுக்கவில்லை எனில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 200 ஆகி இருக்கும்.அதனால் மற்ற பொருட்கள் விலை தாறு மாறாக ஏறியிருக்கும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:54

பாஜக வுக்கு முன்பு போல தீவிரவாத எதிர்ப்பு என்கிற விஷயத்தில் முனைப்பு இல்லை... பப்புவை பேசவிட்டால்தான் பாஜகவுக்கு ஆதாயம் என்று நினைக்காதீர்கள்.. அது ஐந்து வருடங்களுக்கு முன்பு இருந்த நிலை.... இப்போது மக்கள் நம்ப ஆரம்பித்துள்ளனர் .....


sankaranarayanan
செப் 16, 2024 09:01

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அரசியல் அமைப்பையே அவமத்திதற்கு என்ன தண்டனை உச்ச நீதிமன்ற கொடுக்கப்போகிறது அல்லது கண்டும் காணாததகுமாகவே இருக்கப்போகிறதா அல்லது தகுந்த நடவடிக்கைகளை எடுத்து பதவி நீக்கம் செய்யப்போகிறதா அவமானம் அவமானம் பாராளுமன்றத்தையே இவர் அவமானப் படுத்திவிட்டார் இன்னும் என்னய்யா செய்ய வேண்டும்


Iyer
செப் 16, 2024 07:34

இவர்கள் குடும்பமே ஊழல் நிறைந்த திருட்டு குடும்பம். நேரு மிகப்பெரிய ஊழல் மன்னன். அதைவிட பெரிய கொள்ளைக்காரி இந்திரா. ராஜிவ் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கேடி. மன்மோகன்-sonia-rahul த்ரியோ இந்த நாட்டையே சுரண்டி திற்னறது. காங்கிரஸ் கட்சியையே தடை செய்து அவர்களை ஜெயிலில் அடைக்கணும்.


Kalaiselvan Periasamy
செப் 16, 2024 06:11

ராகுல் காந்தி ராஜிவ் காந்தி க்கு அவாப் பெயரை ஏற்படுத்தும் மகன் மட்டுமல்ல தரமற்ற மனிதனும் கூட . இவரை ஆதரிக்கும் மக்கள் இவரை விட கேவலமானவர்கள் என்பதை உலகமே அறியும் .


Kasimani Baskaran
செப் 16, 2024 05:29

பாராளுமன்ற கூட்டுக்குழு வைத்து விசாரிக்க வேண்டும். குறைந்தபட்சம் பாராளுமன்றத்துக்குள் விடக்கூடாது.


M Ramachandran
செப் 16, 2024 02:09

பொறுப்பற்ற சுய நலமிக்க தாய் நாட்டு பற்றற்ற ஊழல் வாதி ராகுல் நம் நாட்டிற்கொரு ஓரூ சாபாக்கேடு


கிஜன்
செப் 16, 2024 02:03

ராகுல் காந்தி அப்படி என்ன தவறாக பேசிவிட்டார் என இப்படி குதிக்கிறதுகள் .... தலைவன் பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல ....


தாமரை மலர்கிறது
செப் 16, 2024 01:01

இடஒதுக்கீடு என்பது படித்த மாணவனின் சீட்டை பிடுங்கி, மண்டுவிடம் கொடுப்பது. அந்நிய மண்ணில் இந்தியாவை அவதூறாக பேசியதற்கு எம்பி பதவியை பறிப்பது நல்லது.


முக்கிய வீடியோ