உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ.,வில் இணைய அழைப்பு: ரெட்டி குழப்பம்

பா.ஜ.,வில் இணைய அழைப்பு: ரெட்டி குழப்பம்

பெங்களூரு: கே.ஆர்.பி., எனும் கல்யாண கர்நாடக முன்னேற்ற கட்சியை, பா.ஜ.,வில் இணைக்கும்படி கட்சி மேலிடம் ஆலோசனை கூறியுள்ளது. இந்த விஷயத்தில் ஜனார்த்தன ரெட்டி குழப்பத்தில் உள்ளார்.முன்னாள் அமைச்சரும், கே.ஆர்.பி., தலைவருமான ஜனார்த்தன ரெட்டியை, பா.ஜ.,வுக்கு இழுக்க முயற்சி நடக்கிறது. லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதாக, அவர் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளார்.கூட்டணி வைப்பதற்கு பதில், கே.ஆர்.பி.,யை பா.ஜ.,வில் இணைக்கும்படி, மேலிட தலைவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில், ஜனார்த்தன ரெட்டி முடிவெடுக்க முடியாமல் தவிக்கிறார்.கே.ஆர்.பி., கட்சியை, திடீரென பா.ஜ.,வுடன் இணைத்தால், வரும் நாட்களில் ஏதாவது கோரிக்கைகளை வைப்பது கஷ்டமாக இருக்கும். வெளியில் உள்ள சுதந்திரம், கட்சிக்கு சென்ற பின் இருக்குமா என்ற சந்தேகம், அவரை வாட்டுகிறது. பா.ஜ.,வில் இணைப்பதை விட, கூட்டணி வைப்பது நல்லது என, அவர் கருதுகிறார்.பா.ஜ.,வுடன் கூட்டணி வைப்பதா அல்லது கட்சியில் கே.ஆர்.பி.,யை இணைப்பதா என்பது குறித்து, இன்னும் சில நாட்களில் அவர் முடிவு செய்வார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

K.Ramakrishnan
பிப் 02, 2024 17:42

பேசாமல் போய் சேருங்கய்யா... பிறகு ஐ.டி.,ஈ.டி., சிபிஐ ரெய்டு எல்லாம் வரும்..


Gurumurthy Kalyanaraman
பிப் 02, 2024 17:15

கட்சியில் இருக்கும் குப்பைகளை நீக்குவதை விட்டுவிட்டு, மேலும் குப்பைகளை கொண்டு வந்து சேர்கிறது இந்த தேசிய கட்சி. சில காலஙகளில் காங்கிரஸுக்கும் இதற்கும் வித்யாசம் ஒன்றும் இல்லாமல் மழுஙகி போக இதைவிட என்ன வேண்டும்? கர்நாடகாவில் இப்படிதான் பொம்மையை முதல் அமைச்சராக்கி, தான் சென்று குப்பையில் விழுந்தது. இன்னமம் பாடம் கற்க வில்லை என்றே நினைக்கிறோம்.


A1Suresh
பிப் 02, 2024 15:44

ஊழல்வாதிகளை தயவுசெய்து சேர்க்கவேண்டாம் . கட்சியின் பெயர் கேட்டு விடும் . மேலும் தெற்கில் பாஜக நற்பெயரை கெடுத்தது இவர்கள் தான் . பழையா தவறிய மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது


K.Muthuraj
பிப் 04, 2024 21:01

பி ஜே பி மத்திய மாநில அரசுகளில் ஊழல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை. அது தங்கள் கட்சி ஆட்சியாக இருந்தாலும். ஆனால் பணம் இந்தியாவை வீட்டை வெளி செல்லும் பாதை மட்டும் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. என்ன ஊழல் செய்தாலும் அந்த பணம் இந்தியாவிற்குள்லேயே சுற்றுகிறது.


raj
பிப் 02, 2024 07:39

Kuttaniya Govinda Govinda.


Easwar Kamal
பிப் 01, 2024 20:56

திருடன் கூட கூட்டணியா?


மேலும் செய்திகள்