உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் மாணவனுக்கு கத்தி குத்து கலவரத்தால் இணைய சேவை ரத்து

ராஜஸ்தானில் மாணவனுக்கு கத்தி குத்து கலவரத்தால் இணைய சேவை ரத்து

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் 10ம் வகுப்பு மாணவரை மற்றொரு மாணவர் கத்தியால் குத்தியதை அடுத்து, நகரில் மத கலவரம் ஏற்பட்டது. இதனால் மொபைல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு உதய்பூரின் பட்டியானி சோஹட்டா பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. சில நாட்களுக்கு முன் பள்ளியின் வெளியில், 10ம் வகுப்பு மாணவரை, அதே பள்ளியைச் சேர்ந்த மற்றொரு மாணவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.அப்பகுதி மக்கள் குத்துப்பட்ட மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் இறங்கினர். அப்போது சிலர் அங்கு உள்ள கடைகள் மீது கற்களை வீசி தாக்கினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு தீ வைத்தனர். இதில் மூன்று கார்கள் எரிந்து சேதமாயின. இதனால் உதய்பூரில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதய்பூரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையரையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கலவரம் பரவாமல் இருக்க மொபைல் இணைய சேவைகள் 24 மணி நேரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளன.

வீடு இடிப்பு

மாணவரை குத்திய மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாணவரின் வீடு வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டியிருப்பது தெரியவந்தது. அந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி ஜே.சி.பி., வாயிலாக வீடு இடித்து தள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்புசாமி
ஆக 18, 2024 08:38

ராஜஸ்தான் மாடல் உருவாகுது. பா.ஜ ஆட்சி நடக்குது.


Lion Drsekar
ஆக 18, 2024 07:45

வளர்த்தது யார் ? இதுதான் இன்றைய கலாச்சாரம் , இதற்குதான் போட்டிபோட்டுக்கொண்டு குடும்பம் குடும்பமாக விவசாயிகள் பயிரை பாதுகாக்க வளரும் வெட்டுக்கிளையை நாம் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் வந்தே மாதரம்


nagendhiran
ஆக 17, 2024 23:24

லுங்கிகளா?


GSR
ஆக 17, 2024 23:20

காம்பஸ் இல்லாமல் உயர்நிலை கல்வி கணித வகுப்பு எப்படி நடக்கும்? அந்த காலத்தில் சைக்கிள் சக்கரம் வளைந்து மட் கார்டில் உரசும். சக்கரத்தை "கோட்டம்" எடுப்பதற்கு பதில் நன்றாக மட் கார்டை நெகிழ்த்தி விட்டு ஒட்டுவர். இன்று பல முக்கிய முடிவுகள் இப்படி தான் எடுக்கின்றனர்.


S. Gopalakrishnan
ஆக 17, 2024 23:07

யோகி ஜி ஆரம்பித்து வைத்த புல் டோஸர் வைத்தியம் எல்லா இடங்களிலும் பரவுகிறது ! அருமை !


sankaranarayanan
ஆக 17, 2024 23:02

பங்களா தேசில் நடந்த மாணவர்கள் கிளர்ச்சி இந்தியாவில் ஒவ்வொவொரு மாநிலமாக அதன் விளைவுகள் அதிகமாக போயிக்கொண்டிருக்கின்றதே அரசு சற்று விழுப்புடன் இருக்க வேண்டும்


Ramesh Sargam
ஆக 17, 2024 22:33

இனி பள்ளிக்கு வரும் மாணவர்கள் கூர்மையான பொருட்கள் எதையும் எடுத்து வரக்கூடாது. மாணவர்கள் புத்தி கூர்மையாக இருந்தால் போதும்.


GSR
ஆக 17, 2024 22:17

குத்தப்பட்டார் ஆனால், கொலையாகவில்லை. நிறைய இரத்தம் வெளியேறியது. ரத்த அழுத்தம் நேற்று 60 என்ற அளவில் இருந்தது இன்று 100 கு வந்துள்ளதாக உதய்பூர் கலெக்டர் பேட்டி அளித்துள்ளார்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ