உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லிக்கு வர ஊராட்சிகளுக்கு அழைப்பு

டில்லிக்கு வர ஊராட்சிகளுக்கு அழைப்பு

கொப்பால்: குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி கர்நாடகாவின் 12 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.டில்லியில் வரும் 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வர். நாடு முழுதும் கடந்த ஆண்டு, அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், கொப்பால் மாவட்டம் கின்னல் கிராம பஞ்சாயத்து தலைவி ஸ்வேதா ராகவேந்திரா டம்பாலா, 41, உட்பட, கர்நாடகாவின் 12 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கிராம பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் குடும்பத்துடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை