உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொய் வழக்கு போட்ட ஐ.பி.எஸ்.,சுக்கு குட்டு :கணவரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவு

பொய் வழக்கு போட்ட ஐ.பி.எஸ்.,சுக்கு குட்டு :கணவரிடம் மன்னிப்பு கேட்க உத்தரவு

புதுடில்லி: 'கணவர், மாமனார் மீது பொய் வழக்கு பதிந்து, 100 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைத்த ஐ.பி.எஸ்., அதிகாரி நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி ஒருவர் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தவிர கணவர் மற்றும் அவரது குடும்பத் தாருக்கு எதிராக கிரிமினல் வழக்கும் பதிவு செய்தார். பதிலுக்கு கணவர் தரப்பிலும் மனைவியான ஐ.பி.எஸ்., பெண் அதிகாரி மீது வழக்குத் தொடரப் பட்டது. இந்த வழக்குகளை தங்கள் சொந்த ஊருக்கு மாற்றக்கோரி இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொய் வழக்கு பதிந்து கணவர் மற்றும் மாமனாரை சிறைக்கு தள்ளிய அந்த பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஐ.பி.எஸ்., அதிகாரியான மனைவி தொடர்ந்த பொய் வழக்கால், கணவர் 109 நாட்களும், மாமனார் 103 நாட்களும் சிறையில் தண்டனை அனுபவித்துள்ளனர். அவர்கள் அடைந்த வேதனைக்கு நிவாரணமாக எதையும் வழங்க முடியாது. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட அந்த பெண், கணவரிடமும், அவரது குடும்பத்தினரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இது தொடர்பான செய்தி பிரபல ஆங்கில மற்றும் ஹிந்தி நாளிதழ்களில் வெளியாக வேண்டும். இந்த உத்தரவு பிறப்பித்த மூன்று தினங்களுக்குள் மன்னிப்பு கோரிய விவகாரத்தை சமூக ஊடகங்களிலும் பதிவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Ravikumar
ஜூலை 24, 2025 12:07

என்ன ஒரு மட்டமான தீர்ப்பு ? மன்னிப்பு கேட்டால் போதுமா ? பொய் வழக்கு பதிவது சட்டப்படி குற்றம் இல்லையா ? போலீஸ்க்கு ஒரு நியாயம் , மக்களுக்கு ஒரு நியாயமா ? அந்த ips அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து இருக்க வேண்டும் . வழக்கு பதிய வேண்டும். பெண்கள் என்றால் மட்டும் ஏன் நீதிமன்றங்கள் குழைந்து போகிறது .முதுகு வளைந்து விடுகிறது . எரிச்சலாக இருக்கிறது .


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 24, 2025 07:38

இது என்ன மாதிரியான தீர்ப்பு..... கனவரும மாமனாரும் நூறு நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்திருக்கிறார்கள் அதுவும் பொய்யான குற்றச்சாட்டால்.... அந்த குடும்பம் சமூகத்தில் எவ்வளவு சங்கடங்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கும் ஐபிஎஸ் என்ற அகங்காரத்தில் போலிஸ் அதிகாரி என்ற மதப்பில் என்னென்ன பேச்சு பேசி அவர்களுக்கு மனஉளைச்சல் கொடுத்திருப்பார் இந்த ஐபிஎஸ் அதிகாரி.. இதற்கெல்லாம் தண்டனை மன்னிப்பு என்பது மட்டுமா? பொதுமக்கள் நியாயம் வேண்டும் என்று கோர்ட் படிக்கோ போலிஸ் ஸ்டேஷனுக்கோ செல்வது வேண்டாத வேலை காரணம் அங்கு பணபலமும, அதிகார பலமும் தான் ஆதிக்கம் செலுத்தும்.. நமக்கு எது நடந்தாலும் நியாயத்தை எதிர்பார்க்காமல் விதியே என்று நினைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும் வேறு வழி ....,!!!


சமீபத்திய செய்தி