உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆதிஷி தற்காலிக முதல்வரா? துணைநிலை கவர்னர் வருத்தம்!

ஆதிஷி தற்காலிக முதல்வரா? துணைநிலை கவர்னர் வருத்தம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'உங்களை தற்காலிக முதல்வர் என அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்தது, என்னை மிகவும் காயப்படுத்தியது' என, டில்லி முதல்வர் ஆதிஷிக்கு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா கடிதம் எழுதி உள்ளார்.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜாமினில் வந்த முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'சட்டசபை தேர்தலில் வென்று மக்கள் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆவேன்' என, சபதமிட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y74d1gv8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதிஷி முதல்வராக பதவியேற்றார். டில்லியில் வரும் பிப்ரவரியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போதே தேர்தல் பிரசாம் களைகட்டி உள்ளது.சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் ஆதிஷியை தற்காலிக முதல்வர் என அழைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் ஆதிஷிக்கு, துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று எழுதிய கடிதம்:சில நாட்களுக்கு முன், உங்களை தற்காலிக முதல்வர் என, அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படையாக அழைத்தது, எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது போன்ற வார்த்தைகளால், என்னை கவர்னராக நியமித்த ஜனாதிபதியையும், உங்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த என்னையும் அவர் அவமதித்து விட்டார்.இது, உங்களுக்கு மட்டுமல்ல, ஜனாதிபதிக்கும், எனக்கும் தான் அவமதிப்பு. தற்காலிக முதல்வர் என்ற விளக்கம் அரசியலமைப்பில் இல்லை. என் இரண்டரை ஆண்டு கால பதவியில், முதன்முறையாக, முதல்வர் பதவியில் வேலை செய்யும் ஒருவரை பார்த்தேன்.உங்கள் கட்சி தலைவர் கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது ஒரு துறையை கூட கவனிக்கவில்லை; கோப்புகளில் கூட அவர் கையெழுத்திடவில்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. அவரை விட பன்மடங்கு சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். பல்வேறு துறைகளுக்கு பொறுப்பேற்று நிர்வாகத்தின் பிரச்னைகளை தீர்க்க முயற்சி செய்கிறீர்கள். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Matt P
ஜன 01, 2025 00:52

கெஜ்ரி வாலே அவரை தற்காலிக முதல்வர் என்று அழைத்திருப்பது தவறு. கெஜ்ரிவாலுக்கு பணிவு வேண்டும். முதல்வர் என்று ஆன பிறகு என்ன தற்காலிகம். முதல்வர் முதல்வர் தான். நான் தான் அந்த இடத்தில் இருக்க வேண்டியவன் என்ற திமிரு தான்.


ஆரூர் ரங்
டிச 31, 2024 11:35

ஆப் கட்சி பரிதாபம். கவர்னரின் கிண்டல் சூப்பர்.


Sudha
டிச 31, 2024 10:02

இந்த ஆளுக்கு சாவே வராதா? முதலை கண்ணீர் என்பதற்கு சக்சேனா என்று பெயர் வைக்கலாம்


duruvasar
டிச 31, 2024 09:03

கெஜ்ரிவால் ஒரு .............. அவனிடம் வேறு எதையும் எதிர்பார்க்கமுடியாது.


Matt P
டிச 31, 2024 09:02

நம்ம பன்னீர் செல்வம் கூட தற்காலிக முதல்வரா தான் இருந்தார். கட்சியை ஆரம்பிப்பவர்கள் கட்சி அவங்களுக்கு தான் சொந்தம் என்பது இயல்பு தானே. கட்சியை ஆரம்பிக்காமலே எனக்கு பின் மகன் மகனுக்கு பின் பேரன் என்ற்றே போய் கொன்டே இருக்கிறதே. இதை எங்கே போயி முறையிடுவது?


Kasimani Baskaran
டிச 31, 2024 07:24

கேஜ்ரிவாள் உலகின் தலைசிறந்த ஊழல் மன்னன். தமிழகத்தில் மட்டும் முதல்வராக இருந்திருந்தால் என்றோ தமிழகம் திவாலாகியிருக்கும்.


Matt P
ஜன 01, 2025 00:47

அப்போ நம்ம இப்போதைய தலைவரு better என்கிறீர்கள்?


sankaranarayanan
டிச 31, 2024 07:23

போடுடா சக்கைபோடு போடு இவர்தான் ஆளுநர் சரியான மனிதர் ஆட்டிவைப்பார் ஆடவும் வைப்பர் இப்படிப்பட்டவர்தான் திராவிட அரசியலுக்கு இப்போது வேண்டும்


அப்பாவி
டிச 31, 2024 06:53

கெவுனர் போஸ்டுக்கே களங்கம்.


Duruvesan
டிச 31, 2024 07:14

மூர்கன் எல்லாம் பெயர் இல்லாமல் திரிவது ஏன்


Chakkaravarthi Sk
டிச 31, 2024 07:59

பெரும்பாவி


Bye Pass
டிச 31, 2024 06:30

ஆடு நனையுதே ..


புதிய வீடியோ