உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛இண்டியா கூட்டணி அமைப்பாளர் ஆகிறாரா நிதீஷ்குமார்?

‛இண்டியா கூட்டணி அமைப்பாளர் ஆகிறாரா நிதீஷ்குமார்?

புதுடில்லி : பா.ஜ.,வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள ‛ இண்டியா' கூட்டணியின் அமைப்பாளர் ஆக பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதீஷ்குமார் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலான கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, நிதீஷ்குமார், 28 எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளார். காங்கிரஸ் தலைமையிலான இக்கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், ஆம் ஆத்மி, திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, திமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. டில்லியில் நடந்த 4வது ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ஆக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை முன்னிறுத்துவது என மம்தா முன்மொழிந்தார். இதனை கெஜ்ரிவால் வழிமொழிந்தார். ஆனால், இதனை ஏற்க கார்கே மறுத்துவிட்டார். பிரதமர் வேட்பாளராக கார்கே பெயர் முன்மொழியப்பட்டது, இண்டியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதீஷ்குமாருக்கு ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நிதீஷ்குமார் அதனை மறுத்து இருந்தார்.இந்நிலையில் மீடியாக்களில் வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: ‛ இண்டியா' கூட்டணிக்கு அமைப்பாளர் ஆக நிதீஷ்குமாரை நியமிப்பது என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, லாலு பிரசாத்,உத்தவ் தாக்கரே உள்ளிட்ட கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. இந்த முடிவுக்கு கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் வாயிலாக இந்த வார இறுதியில் நடக்கும் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Indhuindian
ஜன 04, 2024 08:19

காலணாவுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எவ்வளோ டிராமா இப்பவே கண்ணைக்கட்டுதே


Ravi
ஜன 04, 2024 01:28

அப்போ புள்ளி வைச்ச கூட்டணியோட புள்ளி ராஜான்னு சொல்லுங்க ????????????????????????????????????????


Ramesh Sargam
ஜன 04, 2024 00:22

பாஜகாவை அசைக்க முடியாது.


jagan
ஜன 03, 2024 22:46

அப்போ நிதிஷ் குமாருக்கு அல்வா தான் . பிரதமர் லிஸ்டில் இல்லை என்று சொல்லப்பட்டுவிட்டது


Bye Pass
ஜன 03, 2024 21:46

புள்ளி வெச்ச கூட்டணிக்கு அமைப்பாளரா நியமித்தாலும் பிரதமர் வேட்பாளரா அறிவிக்காவிட்டால் BJP கட்சிக்கு சாதகமா செயல்படுவார்


ஆரூர் ரங்
ஜன 03, 2024 19:08

INDI///காரியக்கமிட்டி????//க்கு தலைவராக?


Padgu
ஜன 03, 2024 17:44

Hindi theriyathathal... vaipai koottaivitta Stalin


M Ramachandran
ஜன 03, 2024 17:10

பின் பக்கம் ஹலால் என்ற வார்தை தெரியுதே பக்கிரி மாட்டிக்கிச்சு பக்ரீத்திற்கு


Anand
ஜன 03, 2024 17:08

அப்படியானால், துணை பிரதமர் கனவில் மிதக்கும் நம்மாளு ஹிந்தி கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டுமே, நமக்கு தமிழை துண்டு சீட்டை பார்த்து படிக்கும் போதே ...... என்ன ஒரு சோதனை.


M Ramachandran
ஜன 03, 2024 17:08

அவ்வளவு மகிழ்ச்சியாகா இல்ல சோகம் தெரிகிறது. அப்போ இவர் தான் பிரதமந்திரி மோதிப்போரா அல்லது மோதிப்பாரா தெரிய வில்லை.


மேலும் செய்திகள்



புதிய வீடியோ