உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எங்கள் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது உண்மையே: பாக்., பிரதமர்

எங்கள் விமானப்படை தளத்தை இந்தியா தாக்கியது உண்மையே: பாக்., பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'விமானப்படை தளங்களை இந்தியா தாக்கவில்லை' என பாகிஸ்தான் கூறி வந்த நிலையில், ''நுார் கான் விமானப்படை தளம் உட்பட பல இடங்களில், இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தியது உண்மை தான்,'' என, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளார்.பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாக்., தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாட்டின் விமானப்படை தளங்கள், ராணுவ நிலைகளை நம் ராணுவம் தகர்த்தது. ஆனால், இதை பாக்., மறுத்தது.இந்நிலையில், இஸ்லாமாபாதில் நடந்த நிகழ்ச்சியில், பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதாவது:மே 9 - 10க்கு இடைப்பட்ட இரவில், அதிகாலை 2:30 மணி அளவில் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர், தொலைபேசியில் என்னை அழைத்தார். அப்போது, நுார் கான் விமானப்படை தளங்கள் உட்பட பல இடங்களில் ஏவுகணைகளை வீசி இந்தியா தாக்கியதாக கூறினார். இதற்கு, பாக்., ராணுவமும் பதிலடி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.இவ்வாறு அவர் பேசினார்.'விமானப்படை தளங்களை இந்தியா தாக்கவில்லை' என பாக்., கூறி வந்த நிலையில், தற்போது முதன்முறையாக நம் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதை, அந்நாட்டின் பிரதமரே ஒப்புக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V Venkatachalam
மே 18, 2025 14:37

மோடி ஏற்பாடு செய்த குழுவால் மானம் கப்பல் ஏறும் நிலைக்கு வந்தபிறகு "எங்கப்பா குதிருக்குள்ள இல்லை" அதுவரைக்கும் எங்கப்பா குதிருக்குள்ள தான் இருந்தார்.


Suppan
மே 18, 2025 12:53

ஜெயசங்கர் பாகிஸ்தானுக்கு இந்தத் தாக்குதல் பற்றி முன்னமேயே கூறிவிட்டார் என்று ராகுல் வழக்கம் போல புருடா விட ஆரம்பித்துவிட்டார். தாக்குதல் இருக்குமென்று உலகத்துக்கே தெரியும். ஆனால் எப்பொழுது என்று தெரியாது . இந்த ஆசாமியை காங்கிரஸ் எப்படித்தான் சகித்துக் கொள்கிறதோ


Suppan
மே 18, 2025 12:49

இந்தத் தாக்குதலே டுபாக்கூர் என்று ராகுல் கூறமுடியாது. நன்றி ஷப்பாஸ் ஜனாப்


Barakat Ali
மே 18, 2025 09:12

ஒத்துக்க வேண்டியதாயிடுச்சு ......


Kasimani Baskaran
மே 18, 2025 06:29

அனைத்து பாக்கிகள், மோடி வெறுப்பாளார்கள் மற்றும் தேச விரோதிகள், திராவிட சமூக விரோதிகள் சமூக வலைத்தளங்களில் இந்தியா மிக அதிகமாக அடிவாங்கிவிட்டதாக போலிப்பிரச்சாரம் செய்து வந்தார்கள். அனைத்தையும் முறியடிக்கும் விவகாரமாக பாகிஸ்தான் விமானப்படை சேதமடைந்துள்ள இடங்களை அவசர கதியில் பழுது பார்க்க டெண்டர் விட்டது. அதன் பின்னர் சிறிது அடங்கியிருக்கிறது. இப்பொழுது பாக்கி பிரதமரே ஒத்துக்கொண்டுள்ளார். இன்னும் திராவிடர்கள் தாக்குதலை விடவேயில்லை. இதுகள் திருந்தவில்லை என்றால் திருத்த வேண்டும். அந்தப்பக்கத்தில் ஏன் போர் நிறுத்தம் வேண்டும் என்று கெஞ்சினார்கள் என்பதை விளக்க வேண்டும். அதற்க்கு அணுக்கதிர்வீச்சின் பலனாக பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து வீடியோ போட்டபின்னர்தான் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்.


Suppan
மே 18, 2025 12:58

பழுது பட்ட விமான தளத்தை சரி செய்ய சில மணி நேரங்கள் போதும். முன்னமேயே தயார் நிலையில் வைக்கப்பட்ட கான்க்ரீட் கட்டிகளை பரப்பி quick setting cement ஐ உபயோகப்படுத்தி சரி செய்து விடுவார்கள். போர்விமானங்கள் அடித்தளத்தில்தான் நிறுத்தப்பட்டிருக்கும்.


K.Uthirapathi
மே 18, 2025 01:57

செபாஸ் ஷெரிஃபின் ஒப்பாரி நூர் கான் விமானப்படைத் தளம் - அணு ஆயுத கிடங்கு வெடித்த சத்தம், என் காதில் தேனாக பாய்கிறது. ட்ரம்ஸ் சத்தத்தில், சற்று ஒலி மெதுவாகத்தான் கேட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை