உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீர்வு காணும் பணி தீவிரம்: மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு பற்றி மத்திய அமைச்சர் விளக்கம்

தீர்வு காணும் பணி தீவிரம்: மைக்ரோசாப்ட் மென்பொருள் கோளாறு பற்றி மத்திய அமைச்சர் விளக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, ஆன்லைன் வர்த்தக சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்னையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் ' 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் எரர்' ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது. Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளித்துள்ள மைக்ரோசாப்ட், தொழில்நுட்ப கோளாறு விரைவில் சீராகும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், ''மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. என்ன பிரச்னை என்பது கண்டறியப்பட்டுள்ளது; மைக்ரோசாப்ட் மென்பொருள் பிரச்னைக்கு தீர்வு காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. ரயில்வே சேவைகளிலும் எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

இறைவி
ஜூலை 19, 2024 20:44

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் IIT, Kanpur இல் M Tech முடித்து IAS படித்தவர். அவர் B.Tech இல் முதல் இடம் பெற்று தங்க மெடல் வாங்கியவர். பத்தாவது வரை ஆல் பாஸ் என்று தமிழக சமச்சீர் கல்வி படித்தவர்களுக்கு இவைகள் புரிய நியாயம் இல்லை.


Vathsan
ஜூலை 19, 2024 16:39

மைக்ரோசாப்ட் fix கொடுத்துவிடுவார்கள். buildup கொடுக்குறீங்க.


hari
ஜூலை 19, 2024 17:41

எல்லாருக்கும் தெரியும்... உன்னை எவன் கேட்டான்


ஆரூர் ரங்
ஜூலை 19, 2024 18:58

அமைச்சரின் கல்வித் தகுதி தெரியுமா? உம்மால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. கருத்துப் பதியும் முன் யோசிங்க.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி