உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது ஆந்திர அரசு

திருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைத்தது ஆந்திர அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு விசாரணைக்குழு அமைத்து ஆந்திர அரசு இன்று ( செப்.,24) உத்தரவிட்டுள்ளது.ஆந்திராவில் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி கோயில் புனிதத்தை அசுத்தப்படுத்தி விட்டதாக தற்போதைய முதல்வர் சந்திரபாபு பரபரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.இதையடுத்து இன்று (செப்.,24) ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குண்டூர் சரக ஐ.ஜி. சர்வ ஷரஸ்தா திரிபாதி தலைமையில் டி.ஐ.ஜி., மற்றும் ஒரு எஸ்.பி., மற்றும் இரு டி.எஸ்.பி.க்கள், ஒரு இன்ஸ்பெக்டர் கொண்ட சிறப்பு விசாரணைக்குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.இக்குழு முந்தைய ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர். காங்., ஆட்சியில் லட்டு பிரசாதம் தயாரிக்க கொள்முதல் செய்யப்பட்ட நெய், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kasimani Baskaran
செப் 25, 2024 05:40

முதலில் இந்துக்கோவில்களில் இந்து அல்லாதவர்களை வேலைக்கு வைக்கக்கூடாது. மாற்றத்தை அடுத்த கட்டத்தில் பார்க்கலாம்.


முருகன்
செப் 24, 2024 22:52

கதை விட மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு இடத்திலும் அதிகமாக உள்ளது அதில் கவனம் செலுத்தினால் கடவுள் நிச்சயமாக மகிழ்ச்சி அடைவார்


Easwar Kamal
செப் 24, 2024 21:11

திருப்பதி சென்றால் சாமியை கும்புடறோமோ இல்லையோ பாதி மக்கள் இந்த லட்டு vanagaave வாங்கவே போறது. இந்த ladai வாங்கிட்டு வரது பெருமையா இருக்குது. முதலில் இந்த ladai ஒழிக்கலாம். என்னுடைய சில நண்பர்கள் இந்த ladai vanagamalae வருவார்கள். அவர்கள்தான் உண்மையான பக்தர்கள்.


Gurumurthy Kalyanaraman
செப் 24, 2024 20:44

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு, ரெட்டிகாருவை சரியாக பழி வாங்கி விட்டார் என்றே தோன்று கிறது. ஆய்வு அறிக்கை கோடு 240 என்றே கலப்பட என்னை தருகிறது. இந்த எண் வெறும் தேங்காய் எண்ணைய் மற்றும் பாம் ஆயில் கலப்படத்தை மட்டுமே குறிக்கும். தமிழக அமைச்சர் ஒருவர் சொன்னது போல மிருக கொழுப்பு கலக்கப்பட்டால் நிச்சயம் துர் நாற்றம் லட்டுவில் வீசும். ஆனால் அப்படி ஒரு புகார் இதுவரை சொல்லப்படவில்லை. ஆகவே, தேங்காய் எண்ணை கலப்படத்தை சந்திரா திசை திருப்பி ரெட்டிகாரு மீண்டும் அரசியலில் தலையே தூக்க முடியாமல் பண்ணுவதாகவே தோன்ருகிறது. ஆனால் இது இந்து மதத்தை அழிக்க துணிந்த ரெட்டிகாருவுக்கு வேண்டியதுவே.


Ramesh Sargam
செப் 24, 2024 20:34

நாய்டு அவர்கள் இந்த திருப்பதி லட்டு ஊழலை வெளிஉலக்திற்கு கொண்டு வந்தமைக்கு நன்றி கூறும் இதேவேளையில், இதுவே கதி என்று இல்லாமல், வாக்களித்த மக்களின் மற்ற பல பிரச்சினைகளுக்கும் கவனம் செலுத்துவது நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை