உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

துவங்கிய உடன் பார்லிமென்டின் இரு சபைகளும் ஒத்திவைப்பு

அதானி மீதான லஞ்ச புகார் குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கினர். இதனால், இரு சபைகளின் அலுவல்களும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. இதையொட்டி பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், பார்லிமென்டை முடக்க முயற்சிக்கின்றனர். அவர்களது உள்நோக்கம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். அதனால் தான், சரியான நேரத்தில் எதிர்க்கட்சிகளை மக்கள் தண்டிக்கின்றனர். எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதன்பின், காலை 11:00 மணிக்கு சபை அலுவல்கள் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி சபைக்குள் நுழைந்தார்.

கோஷம்

அப்போது, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜ.,வால் முன்வைக்கப்பட்ட, 'ஒன்றாக இருப்பதே பாதுகாப்பு' என்ற கோஷத்தை பா.ஜ., - எம்.பி.,க்கள், எழுப்பியபடியே கைதட்டி பிரதமரை வரவேற்றனர். அதற்கு பதிலடியாக, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், 'அதானி... அதானி' என, முழக்கமிட்டனர்.பின் சபாநாயகர் ஓம் பிர்லா வந்ததும், தேசிய கீதத்துடன் சபை நடவடிக்கைகள் துவங்கின. முதல் அலுவலாக, மறைந்த எம்.பி.,க்களுக்கு இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டது.

அதில் இரண்டு பேர் சிட்டிங் எம்.பி.,க்கள் என்பதால் சபை உடனடியாக ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பியபடி கலைந்து சென்றனர்.மீண்டும் சபை கூடியபோது, உ.பி., சம்பல் கலவரம், அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். சபாநாயகர் இருக்கையில் இருந்த பா.ஜ., உறுப்பினர் சந்தியா ரே, எதிர்க்கட்சி எம்.பி.,க்களை அமைதி காக்கும்படி கோரிக்கை விடுத்தார். அவர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதை அடுத்து சபையை நாளை வரை ஒத்திவைத்தார்.

நோட்டீஸ்

ராஜ்யசபா, காலை கூடியதுமே பிரச்னை கிளம்பியது. அதானி லஞ்ச விவகாரம், மணிப்பூர், உ.பி., மதக்கலவரம், வயநாடு இயற்கை பேரிடர் என, பல்வேறு விவகாரங்கள் குறித்து எம்.பி.,க்கள் நோட்டீஸ் வழங்கியிருந்தனர். அதிலும், அதானி விவகாரம் குறித்து சபை விதி எண், 267ன் கீழ் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி, 13 எம்.பி.,க்கள் நோட்டீஸ் அளித்திருந்தனர்.இவற்றை, சபை தலைவர் ஜக்தீப் தன்கர் நிராகரித்தார். இந்த நோட்டீஸ்கள் அனைத்துமே சபை விதிகளின்படி இல்லை என்றும் கூறினார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச எழுந்தார். அவரை நோக்கி, ''அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பல்வேறு முக்கிய விஷயங்களை பேச வேண்டியுள்ளது. நீங்கள் விபரமறிந்தவர். சபையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்,'' என, ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ''கடந்த 75 ஆண்டுகளில் எனக்கு, 54 ஆண்டுகள் பொது வாழ்க்கை அனுபவம் உள்ளது. எதைப் பேச வேண்டுமென்பது குறித்து எனக்கும் தெரியும்,'' என கூறிவிட்டு பேசத் துவங்கினார். உடனே, ''அதானி விவகாரமா,'' என ஜக்தீப் தன்கர் கேட்டார். அதற்கு, ''ஆமாம்,'' என மல்லிகார்ஜுன கார்கே கூற, ''அதற்கு அனுமதியில்லை,'' என ஜக்தீப் தன்கர் கூறினார்.

வாக்குவாதம்

அதையும் மீறி பேசிய மல்லிகார்ஜுன கார்கே, ''அதானி விவகாரத்தால், உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மரியாதை குறைந்து விட்டது. அதானிக்கு பிரதமர் ஆதரவு தருகிறார். ''எனவே, இந்த விஷயம் குறித்து சபையில் பேசுவதற்கு நீங்கள் அனுமதி அளித்தால், அது எவ்வளவு முக்கியமான விவகாரம் என்பதை நாங்கள் விளக்குவோம்,'' என்றார்.இதை ஏற்காத சபைத்தலைவர், அமளிக்கு மத்தியில், 15 நிமிடங்களுக்கு சபையை ஒத்தி வைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோது, எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கும், சபை தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் வாக்குவாதம் தீவிரமடைந்தது.இதையடுத்து, நாளை வரை சபை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆயுட்காலத்தை நீட்டிக்க வேண்டும்

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவை அவரது சேம்பரில் சந்தித்து, வக்பு மசோதா குறித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில், 'இந்த கூட்டத்தொடரில், வக்பு மசோதா மீதான ஆய்வுகளை இன்னும் தொடர வேண்டியுள்ளது. அவசர கதியில் நிறைவேற்ற அரசு முயற்சிக்கிறது. அதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. மசோதாவை ஆய்வு செய்து வரும் கூட்டுக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட சபாநாயகர், 'அனைத்து தரப்பினரது கருத்துக்களை கேட்டபிறகே, வக்பு மசோதா குறித்த அறிக்கை தயார் செய்யப்படும்' என வாக்குறுதி அளித்ததாக எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

பிரியங்கா வரவில்லை

வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிரியங்கா, நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. இன்று, அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்ட நிகழ்ச்சி இருப்பதால் அனைவரும் அங்கு இருப்பர்.இரு சபைகளிலும் அலுவல்கள் இருக்காது என்பதால், இன்றும் பதவியேற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. எனவே, பிரியங்காவும், மஹராஷ்டிராவின் நான்டெட் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் வென்ற சவான் ரவீந்திர வசந்த் ராவும், லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லா முன்னிலையில் நாளை பதவியேற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

Kalaiselvan Periasamy
நவ 26, 2024 21:54

பப்பு ஒரு ... என்பதை உலகமே அறியும்


sankaranarayanan
நவ 26, 2024 21:06

அதானியைப்பற்றி பேசுமுன் கடந்த ஜூலை மாதத்தில் சென்னையில் தனியாக அதாணியை சந்தித்தது யார் இந்த விவரம் முழுவதும் வெளிவந்தால் இனி சந்தி சிரிக்க போவது யார் என்றே விரைவில் வெளி வரும் எவ்வளவு. தரகு நடந்தது எல்லாமே வெளிவந்தால் சந்தி என்ன சகாப்தமே முடிந்து விடும்.


nagendhiran
நவ 26, 2024 18:11

நாடாளுமன்றம் கூடினாலே இதுபோல பிரச்சனைகள் வரும்? பிறகு சரியாகிடும்? பப்பு கூட்டங்கள் சில்லறை பசங்க?


என்றும் இந்தியன்
நவ 26, 2024 17:01

அப்போ ஒன்னு பண்ணலாம் பள்ளிக்கூடம் கல்லூரி மருத்துவமனை இண்டஸ்ட்ரி .........இப்படி எல்லா இடத்திலும் இருக்கும் எல்லோரும் அங்கு சென்று ஆர்ப்பாட்டம் செய்து வெளியில் வரவேண்டும் என்று சொல்வது போல இருக்கின்றது இந்த கஸ்மால கம்மினாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்??ஏண்டா நீங்கள் எம்பிக்களாக ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். இந்திய மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக???ஆனால் நீங்கள் செய்வது என்ன???பாராளுமன்றம் செல்வது ஆஆ ஊ ஊ அய்யாவு என்று கத்துவது உடனே பாராளுமன்றம் காண்டீனுக்கு சென்று சீப் உணவை கொட்டிக்கொள்வது மறுநாளும் அப்படியே செய்வது???ஏன்டா அங்கே எம்பியாக உங்கள் கடமையை செய்ய சென்ரீர்களா இல்லை அதன் நடைமுறை செயல்முறையை தடுக்கசென்ரீர்களா ????


Narayanan Muthu
நவ 26, 2024 13:37

மூத்த பரிதாபங்கள்


சம்பர
நவ 26, 2024 13:27

பேசாம முடிவிடு


ديفيد رافائيل
நவ 26, 2024 12:13

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் MP யும் இந்த தொடர் முழுக்க suspension பண்ணிட்டு பார்லிமென்ட் நடத்துங்க. இந்த MP க்களை தேர்வு செய்த மக்கள் அசிங்கப்படட்டும் தப்பே இல்லை.


Sampath Kumar
நவ 26, 2024 10:16

இன்ன பிற ஹிந்துத்துவா சபைகள் எல்லாம் வரிந்து கார்டிகொண்டு இந்த அணிக்கு துணை இருக்க காரணம் என்ன ? வேறு இன்ன ஹிந்துத்துவ வியாதிகள் ரூபா ரோம்ப உத்தமபுத்திரர்கள் என்று காட்டத்தான் வந்த நாசகார கும்பல் இந்தியாவை ஹிந்து தேசம் என்று போர்வையில் சூறை ஆடிக்கொண்டு உள்ளது இதனை நாட்டுமக்கள் பார்த்து கொண்டுதான் உள்ளார்கள் அதற்கு தக்க பதில் அடியும் கொடுப்பார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 26, 2024 10:44

ஹிந்துக்கள் தங்களது எதிரிகள் யாரென்று இன்னமும் உணரவில்லை ..... உணர்ந்தால் உன்னைப் போன்றவர்கள் இப்படிக் கருத்தெழுத மாட்டார்கள் .....


ஆரூர் ரங்
நவ 26, 2024 11:20

அப்போ நம் நாட்டை ஹிந்து தேசம் என்று குறிப்பிட்ட பைபிளை உங்களால் என்ன செய்ய முடியும்?


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 26, 2024 16:26

இவர் சொல்வதை பார்த்தால் யுதர்களை அழித்து துரத்தி ஜெர்மனியை உருவாக்கிய ஹிட்லரை போல் இங்கும் இந்துக்களுக்கு ஒரு தேசம் இருக்கக்கூடாது என்று அடித்து துரத்த வேண்டும் என்று சொல்கிறாரோ இந்த இந்து பெயர் கொண்ட இந்து மதத்தவர். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் ஹிட்லர் யுதர்களை அடித்து அழித்து வெளியேற்றினார். அவர்கள் கிடைத்த இடத்தை வைத்து இன்று விஞ்ஞானத்தில் பல மடங்கு உயர்ந்து தங்கள் சிறிய நாட்டில் கிடைத்தை கொண்டு உணவு பொருட்கள் இருந்து அனைத்திலும் தன்னிறைவு பெற்று உள்ளனர். ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய அமெரிக்கா ஜப்பானை அழிக்க நினைத்தது ஆனால் ஜப்பான் பொறுமையாக அனைத்தும் தாங்கி இயற்கையையும் வென்று இன்று ஜப்பான் இல்லாமல் அமெரிக்கா இருக்க முடியாது என்ற நிலையை கொண்டு வந்து அமெரிக்காவே ஜப்பானை பாதுகாக்க வேண்டிய நிலை இப்போது.


Ganapathy
நவ 26, 2024 18:17

புலம்பல் ஓயாது இனி.


rasaa
நவ 26, 2024 10:11

தொடர் தோல்விகளின் வெளிப்பாடு. காங்கிரஸுக்கு வேறு வழி கிடையாது. என்று காங்கிரஸ் ஒரு சீட்டு கூட கிடைக்காத காலம் வருகின்றதோ அதுவே பொற்காலம்


கிஜன்
நவ 26, 2024 09:54

அறுக்கத்தெரியாத அம்மங்காருக்கு ....காங்கிரஸாருக்கு .... இடுப்பை சுத்தி 50 கதிர் அருவாளாம் ... .... நேற்று தசமி ...ஒழுங்கா வயநாட்டு வெற்றியோட பதவி ஏற்றிருக்கலாம்... இன்னிக்கு ஏகாதசி அப்புறம் ...துவாதசி ...பிரதோஷம் .... ஏன்ப்பா ... உங்க தலைவிக்கு இப்படி இடைஞ்சல் பண்ணுறீங்கோ ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை