உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 1000 கோடி ஊழல்: சிக்குகிறார் மாஜி அமைச்சர்

ராஜஸ்தானில் ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ. 1000 கோடி ஊழல்: சிக்குகிறார் மாஜி அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஜல்ஜீவன் திட்டத்தை அமல்படுத்தியதில் ரூ. 1000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் காங்., அமைச்சர் மகேஷ் ஜோஷி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ராஜஸ்தானில் முந்தை காங்., முதல்வராக அசோக் கெலாட் ஆட்சியின் போது வீடு தோறும் குழாய் இணைப்புகள் வாயிலாக பாதுகாப்பான குடிநீரை வழங்கும் வகையில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதில் வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்க டெண்டர்கள் பெறவும், அரசு ஊழியர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் கொடுத்தது, என இத்திட்டத்தை அமல்படுத்தியதில் ரூ. 1000 கோடி வரை முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ., புகார் தெரிவித்திருந்தது. கடந்தாண்டு சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக இன்று முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷி உள்ளிட்ட 22 பேர் மீது ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறைத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.முன்னதாக அமலாக்கத்துறை பணமோசடி வழக்கும் பதிவு செய்துள்ளதால், தேவைப்பட்டால் மகேஷ் ஜோஷி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sugumar s
நவ 06, 2024 12:22

கொஞ்சம் நல்லா பாருங்க. 10000 கோடியா இருக்கும்.


KR
நவ 05, 2024 21:54

Congress leaders can come to Dravida model university and learn the art of scientific corruption and how to avoid getting caught later.


Visu
நவ 05, 2024 21:46

பொன்முடிக்கு தண்டனை கிடைக்குமா


அப்பாவி
நவ 05, 2024 21:18

இது அசோக் கெலாட்டுக்கு தெரியாதாம். அவனையும் புடிச்சு உள்ளே போடணும். சச்சின் பைலட்டுக்குத்தான் ஒரு ஆட்டையும்.போட முடியலை. பாவம்.


R K Raman
நவ 06, 2024 22:59

பைலட்டுக்கு காஷ்மீர் சொத்து நிறைய சீதனமாக இருக்கும்


அப்பாவி
நவ 05, 2024 21:16

ஊழல் செய்வாங்கன்னு தெரிஞ்சே அத்தனை கோடிகளை அள்ளிக்குடுத்த சௌக்கிதார்களை என்னன்னு சொல்றது? இத்தனைக்கும் நல்ல அறிவுள்ள ஆளுங்களை வெச்சுக்கிட்டு ஆட்சி செய்யறாராம்.


Indhuindian
நவ 05, 2024 19:49

சேர்ந்தே இருப்பது ஊழலும் காங்கிரஸும்.சேராதிருப்பது காங்கிரஸும் நேர்மையான அரசியலும் ஆச்சர்யமே இல்லையே...


Ramesh Sargam
நவ 05, 2024 19:45

செய்தித்தாள்களை திறந்தாலே ஊழல் ஊழல் ஊழல் செய்திகள்தான். ஆனால் இதுவரை ஒரு ஊழல் செய்தவர்களும் தண்டிக்கப்பட்டதாக செய்தி இல்லை. அதிகம் போனால், ரெண்டு அல்லது மூன்று மாதம் சிறை தண்டனை. பிறகு அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து வெளியேவிட்டுவிடுவார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் தூங்கும். ஊழல் செய்தவர்கள் ஒன்று சிறப்பாக ராஜபோக வாழ்க்கை வாழ்வார்கள், மீண்டும் ஊழல் செய்துகொண்டே, அல்லது இயற்கை மரணம் அடைந்து பரலோகம் போயிருப்பார்கள். வெட்கம். வேதனை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை