உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சகவாசம் சரியில்லையே; சாட்டையை சுழற்றினார் கவர்னர்: 6 அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்

சகவாசம் சரியில்லையே; சாட்டையை சுழற்றினார் கவர்னர்: 6 அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்; ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்த 6 அரசு அதிகாரிகள் பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

போதை நெட்வொர்க்

பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான செயல்களுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ., உள்ளிட்ட அமைப்புகள், இந்தியாவில் போதைப் பொருள் வினியோக நெட்வொர்க்கை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றன.

பணி நீக்கம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர், போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது மற்றும் நிதி கொடுத்து உதவியதாக புகார் எழுந்தது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு விசாரணையில் உறுதியானது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி உள்பட 6 அரசு அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கம் செய்து துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.

என்.ஓ.சி.,கட்டாயம்

ஜம்மு காஷ்மீரில் அரசுப்பணிகளில் பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் ஊடுருவுவதைத் தடுப்பதற்காக, பணி உயர்வு பெறும் காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள், உளவுத்துறையினரிடம் இருந்து என்.ஓ.சி., சான்றிதழை பெற வேண்டும் என்பது கட்டாயமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

GMM
ஆக 04, 2024 23:10

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு கல்வி, வயது வரம்பு, நன்னடத்தை அவசியம் இல்லை. அதனால், மக்கள் பிரதிநிதிகள் கொள்கை வகுக்க மட்டும் தான் முடியும். பரிந்துரை தவிர எந்த நிர்வாக உத்தரவும்போட, செயல் படுத்த முடியாது. ஒரு அரசு என்ஜினீயர், டாக்டர், தாசில்தாருக்கு இருக்கும் அதிகாரம் எந்த மந்திரிக்கும் கிடையாது. மந்திரியிடம், போலீஸிடம், வக்கீல்களிடம் குடிமக்கள், அரசு ஆவண விவரம் இருக்காது. கவர்னர் தான் மாநில நிர்வாக தலைவர். அரசியல் சாசன பிரதிநிதி. கவர்னர் பதவி நிரந்தரம். அண்ணா துவக்கிய திராவிட சட்ட முறிவு விளக்கம் அமைச்சர் மாய அதிகாரத்தை கொடுத்து வருகிறது. கவர்னர் , ஜனாதிபதி எடுத்த முடிவை நீதிமன்றம் பரிசீலிக்க முடியாது. எதிர்க்கட்சி அரசியல் ஆகுவதால், மத்திய அரசு நீதிமன்றத்தை முறைப்படுத்த வழி தெரியாமல் விழிக்கிறது.


venugopal s
ஆக 04, 2024 10:57

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசில் மாநில ஆளுநருக்கு அந்த அதிகாரம் கிடையாது என்பது சங்கிகளுக்கு தெரியாமல் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!


தாமரை மலர்கிறது
ஆக 03, 2024 20:49

தமிழகத்திலும் கவர்னர் ரவி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், தமிழ்நாட்டு மேயர் ஸ்டாலினுக்கு பயம் ஏற்படும். மேயருக்கு பயத்தை கொடுங்கள்.


K.n. Dhasarathan
ஆக 03, 2024 20:39

சபாஷ் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும், டிஸ்மிஸ் மட்டும் போதாது, காவல் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Ramesh Sargam
ஆக 03, 2024 20:08

தமிழகத்தில் இப்படி பதவி நீக்கம் செய்ய முடியாது தமிழக கவர்னரால். ஏன் என்றால் இங்கே முதல்வர் இருக்கிறார். தமிழக முதல்வர் அப்படி எல்லாம் செய்யமாட்டார். வேண்டுமென்றால் அவர்களுக்கு சன்மானம் கொடுத்து கௌரவிப்பார்.


VENKATASUBRAMANIAN
ஆக 03, 2024 19:39

இதுதான் ஆட்சி. இங்கே கூறுவது போல் திராவிட மாடல் ஆட்சி இல்லை


S. Narayanan
ஆக 03, 2024 19:38

இப்போது இந்த கவர்னர் தான் தமிழ் நாட்டுக்கு தேவை


என்றும் இந்தியன்
ஆக 03, 2024 18:39

பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.???திருட்டு திராவிட ஆட்சியில் என்ன நடக்கும் மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வாரம் Suspend செய்யப்படுவார்கள் அவ்வளவு தான்.


Swaminathan L
ஆக 03, 2024 18:24

பணி நீக்கம் மட்டுமின்றி அவர்களின் பென்ஷன் முதலான எல்லா பெனஃபிட்களும் தடை செய்யப்பட்டு சட்டப்படி கடுமையான தண்டனையும் தரப்பட வேண்டும்.


GMM
ஆக 03, 2024 18:03

கவர்னர் முக்கிய பணி நிர்வாக அதிகாரிகள் ஆளும் கட்சி வலையில் சிக்கி, வளைந்து கொடுப்பதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க முடியும். தலைமை பொறுப்பில் உள்ள அதிகாரிகள் அனைவரும் கவர்னர் நிர்வாகம் கீழ். ஜனாதிபதியின் அதி முக்கிய அதிகாரி கவர்னர். மாநில கட்சிகள் நியமன பதவி, மத்திய அரசு கைப்பவை என்று விளம்பரம் செய்து, நீதிமன்றத்தில் சட்ட நிலையை மாற்றிவிட்டனர். மாநில அளவில் தலைமை பொறுப்பில் உள்ள குற்ற அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய அதிகாரம் கொண்ட ஒரே அதிகாரி கவர்னர். மந்திரி, பேரவை, நீதிமன்றம் பரிந்துரை செய்ய மட்டும் தான் முடியும். வரவேற்க வேண்டிய கவர்னர் துணிந்த நடவடிக்கை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை