உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு... நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடல் வரிகளை ஜவஹர்லால் நேரு... நீக்கினார்!: பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: “தேசபக்தி பாடலான வந்தே மாதரத்தில் இடம் பெற்றிருந்த முக்கிய வரிகள், 1937ல், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவால் வேண்டுமென்றே வெட்டி துாக்கி எறியப்பட்டன. அதுவே பிரிவினைக்கான விதைகளை விதைத்து, பிளவுபடுத்தும் மனப்பான்மையை உருவாக்கி, நாட்டுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார். வங்க மொழி கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875 நவ., 7ல், அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், நாடு முழுதும் அடுத்த ஓராண்டுக்கு கலைநிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. சிறப்பு தபால் தலை இதன் ஒருபகுதியாக, தலைநகர் டில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டுகளானதை குறிக்கும் வகையில், சிறப்பு தபால் தலை மற்றும் நாணயத்தை அவர் வெளியிட்டார். தேசிய கலைஞர்களால் பாடப்பட்ட, 'வந்தே மாதரம்' பாடலையும் அவர் கேட்டு மகிழ்ந்தார். நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: வந்தே மாதரம் பாடல், நாட்டின் சுதந்திர போராட்டத்தின் குரலாக ஒலித்தது. அது, ஒவ்வொரு இந்தியரின் உணர்வையும் வெளிப்படுத்தியது. ஆனால் துரதிருஷ்டவசமாக, 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம் பெற்றிருந்த சில முக்கிய வரிகள், வெட்டி துாக்கி எறியப் பட்டு, அதன் ஆன்மா அகற்றப்பட்டது. வந்தே மாதரம் பாடலை பிளவுபடுத்திய செயலே, பிரிவினைக்கான விதைகளையும் விதைத்தது. நாட்டை கட்டமைக்கும் இந்த மஹா மந்திரத்திற்கு ஏன் இந்த அநீதி இழைக்கப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பிளவுபடுத்தும் மனப்பான்மை இன்றும் நாட்டிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வந்தே மாதரம் எல்லா காலகட்டங்களுக்கும் பொருத்தமானது. எதிரிகள் பயங்கரவாதத்தை பயன்படுத்தி நம் பாதுகாப்பையும், கவுரவத்தையும் தாக்கிய போது,​ துர்க்கையின் வடிவத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பது இந்தியாவிற்கு தெரியும் என்பதை உலகம் கண்டது. பெண் சக்தி வந்தே மாதரம் என்பது ஒரு வார்த்தை, மந்திரம், சக்தி, கனவு, தீர்மானம். இது பாரத அன்னை மீதான பக்தி; வழிபாடு. இது, நம் வரலாற்றுடன் நம்மை இணைக்கிறது. நம் எதிர்காலத்திற்கு புதிய தைரியத்தை அளிக்கிறது. இந்தியர்களான நாம் அடைய முடியாத எந்த இலக்கும் இல்லை. அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நாம் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு நாட்டை கட்டமைக்க வேண்டும். தேசத்தை ஒரு தாயாகவும், தாயை வலிமையின் தெய்வீக வடிவமாகவும் கருதும் இந்த உணர்வு, ஆண்களையும், பெண்களையும் சமமாக உள்ளடக்கிய ஒரு சுதந்திர இயக்கத்திற்கு வழிவகுத்தது. இது, நாட்டை கட்டமைப்பதில் பெண் சக்தியை முன்னணியில் வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஏளனம் செய்தார்! கடந்த 1937ல், வந்தே மாதரம் பாடலில் இடம்பெற்றிருந்த கடவுள் துர்காதேவி பற்றிய வரிகளை நீக்கிய பின்னரே, காங்கிரசின் பாடலாக, மறைந்த முன்னாள் பிரதமர் நேரு அதை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்களை திருப்திபடுத்தவே, துர்காதேவி பற்றிய வரிகளை அவர் நீக்கினார். இதுவே, நாட்டின் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது. வந்தே மாதரம் பாடல், நாட்டின் தேசிய பாடலாக இருக்க முடியாது என்றும் நேரு ஏளனம் செய்தார். - சி.ஆர்.கேசவன் செய்தி தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

ராஜா
நவ 08, 2025 17:02

நேரு பிரதமராக இருந்து இராவிட்டால் இந்த வடக்கன்ஸ் படித்து இருக்க மாட்டார்கள்


V RAMASWAMY
நவ 08, 2025 09:13

அது மட்டுமா, இன்னும் பலப்பல. சர்தார் வல்லப் பாய் படேல் பிரதம மந்திரியாக ஆகியிருந்தால், இன்னும் எத்தனையோ தேசத்தின் நலன்கள் வளங்கள் முதன்மை பெற்றிருக்கும், இப்பொழுது பெருகியிருக்கும் அவலங்களும் தீய சக்திகளும் நிச்சயமாக பெருகியிருக்காது.


Barakat Ali
நவ 08, 2025 09:13

ஆன்மிகம் போற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தை மாத்துன மாதிரிதானே ????


Barakat Ali
நவ 08, 2025 11:20

மஞ்சள்துண்டுத் திருடர் ...


kumar
நவ 08, 2025 08:57

இப்படித்தான் இங்கேயும் சுந்தரம் பிள்ளை தமிழ் தெய்வ வாழ்த்து என்று தலைப்பு கொடுத்து எழுதிய பாட்டை தமிழ் தாய் வாழ்த்து என்று கடவுள் மறுப்பு கூட்டம் மாற்றி அந்த கவிதையில் பல இடங்களை வெட்டி , மாற்றி மக்களை மூளை சலவை செய்து பாட சொன்னது கருணாநிதி . அவரது கன்னட தலைவரே தமிழ் தெய்வ வாழ்த்தை தமிழ் தாய் வாழ்த்து என்று மார்ட்டியதை எதிர்த்தார் . . இப்போது நாம் பாடுவது பிள்ளை அவர்கள் இயற்றிய பாட்டில் ஒரு பகுதி என்பது 200 ரூபா கூட்டத்துக்கு தெரியுமா ? இதே வந்தேமாதரம் தேசிய பாடலை தங்கள் மார்க்கம் தான் முக்கியம் என்று பாட மறுத்து போராட்டம் செய்ததும் ஒரு கும்பல். இவர்களை என்ன சொல்லுவது ? பாரதி பாடியது போல் நெஞ்சு பொறுக்கவில்லையே


Sakthi
நவ 08, 2025 06:39

மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஜீன்ஸ் தலைமுறை திராவிட கூட்டத்தையும் அதன் கூட்டாளி காங்கிரஸ் கூட்டத்தையும் கூண்டோடு தவிர்க்க ஆரம்பித்தது விட்டது.


ramani
நவ 08, 2025 06:32

நேரு செய்த தவறுகள் கணக்கில் அடங்காது.


naranam
நவ 08, 2025 05:31

ஏன், மக்களுக்கு உண்மை தெரிய வேண்டாமோ? காங்கிரசின் தில்லுமுல்லுகள் நாட்டுக்குத் தெரிய வேண்டியது மிக மிக அவசியம் என்பதை நினைவில் கொள்ளுவது நல்லது..


Mani . V
நவ 08, 2025 03:57

சார் பாவம், இன்னும் 1948 ஆம் வருட நினைப்பிலேயே இருக்கிறார். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காங்கிரஸ் கட்சியை குறை சொல்லியே மக்களை ஏமாற்றப் போகிறாரோ?


nisar ahmad
நவ 08, 2025 12:45

காங்கிரஸ் மேல் இவ்வளவு கோபம்


Govi
நவ 08, 2025 03:08

எப்ப பாரு இதே பாட்டு அதாலதான் தோற்கடிக்கபட்டார்க இப்ப என்ன நடக்குது அத பேச வத விட்டுட்டு . இதே பல்லவி


Amruta Putran
நவ 08, 2025 01:55

Vande Mataram - Bow your mother(Land)


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை