உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்தில் சேர விரும்பினேன்: ஜெயா பச்சன்

ராணுவத்தில் சேர விரும்பினேன்: ஜெயா பச்சன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி.,யான ஜெயா பச்சன், தான் ராணுவத்தில் சேர விரும்பியதாகவும், ஆனால் அந்த காலக்கட்டத்தில் செவிலியர்களை தவிர மற்ற பெண்களுக்கு அனுமதி கிடையாது எனவும் பழைய நினைவுகளை பகிர்ந்தார்.பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மனைவியும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஜெயா பச்சன் (75) 2004ல் சமாஜ்வாதி கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யானார். அதிலிருந்து தொடர்ந்து 4வது முறையாக அப்பதவியில் நீடிக்கிறார். வரும் ஏப்ரலில் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், 5வது முறையாக அவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார்.ஜெயா பச்சன் தனது மகள் ஸ்வேதா பச்சனுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் பகிர்ந்துகொண்டனர். அப்போது ஜெயா பச்சன் பேசியதாவது: முன்பெல்லாம், ஆண்களை பின்னால் அமர வைத்து பெண் வாகனம் ஓட்டினால் அபூர்வமாக பார்க்கப்படும். ஆனால் இப்பொழுது அதையெல்லாம் சாதாரணமாக பார்க்கின்றனர். அந்த வகையில் உண்மையில் முன்னேறிவிட்டோம். நான் ராணுவத்தில் சேர விரும்பினேன். நான் மிகவும் ஏமாற்றமடைந்த ஒரு காலகட்டம் அது. அந்த நேரத்தில், செவிலியரை தவிர மற்ற பெண்களை ராணுவத்தில் அனுமதிக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.அப்போதைய காலக்கட்டத்தில் பல துறைகளில் இருந்த ஆணாதிக்க முறைகளால் பெண்களுக்கு ஏற்பட்ட தடைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். ராணுவத்தில் சேர விருப்பப்பட்டும் செல்ல முடியவில்லை என ஜெயா பச்சன் வேதனையுடன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
பிப் 23, 2024 23:56

ராணுவத்தில் சேர்ந்திருந்தால் ரூ. 1,800 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்திருக்கமுடியாது...


Ramesh Sargam
பிப் 23, 2024 23:55

அய்யய்யோ, ராணுவத்திற்கு பெரிய இழப்பு..


K.Ramakrishnan
பிப் 23, 2024 18:45

உயரம் குறைவு என்பதால்சேரவில்லையோ..?


Mohan das GANDHI
பிப் 23, 2024 17:35

உருட்டல் பொய்யர் இவள். பேசுவதோ தான் மிக யோக்கியர் என்ற நினைப்பு செய்வதோ எதிர்வினை கட்சி சமாஜவாதி கொள்ளையர்கள் கூட்டத்தில் இவரும் ஒரு மெம்பர். கேவலம் இவள். இவளால் ஏழை எளிய மக்களுக்கு ஒரு பிரோயோஜனமும் இல்லை அரசியலில் இது ஒரு தெண்டம் தான்.


HoneyBee
பிப் 23, 2024 17:26

நான் கூட யுரேனஸ் கிரகத்துக்கு போகர் வரணும்னு ஆசை பட்டேன். ஹும்


A1Suresh
பிப் 23, 2024 16:17

இருப்பது சமாஜ்வாதி கட்சியில். ஆனால் பேசுவது தேசபக்தி. என்ன ஒரு ஏழாம் பொருத்தம் ?


J.V. Iyer
பிப் 23, 2024 16:03

இந்தம்மா எப்படி அமிதாப் பச்சனுக்கு மனைவியாக இருக்கிறார்? சரியான சரவெடி.


Godyes
பிப் 23, 2024 15:46

முடிஞ்சு போச்சேம் மா. இப்ப சொல்லி என்ன பிரயோசனம்.


சொல்லின் செல்வன்
பிப் 23, 2024 13:54

உங்க உயரத்துக்கு ஏற்ற வேலைதான் ஆண்ட்டி


ரத்தினம்
பிப் 23, 2024 12:09

நம்பித்தொலைக்க வேண்டியிருக்கு.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ