மேலும் செய்திகள்
விவேகானந்தா கல்லுாரி கடற்கரையில் துாய்மை பணி
1 hour(s) ago
மாநில பா.ஜ., தலைவர் பேராயருடன் சந்திப்பு
1 hour(s) ago
ஆல்பா பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
1 hour(s) ago
உடுப்பி, : லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, ஒரு வாரத்தில் முடிவு எடுப்பதாக, முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டே கூறி உள்ளார். லோக்சபா தேர்தலில் உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில் வெற்றி பெறும் நோக்கில், முன்னாள் எம்.பி., ஜெயபிரகாஷ் ஹெக்டேயை களம் இறக்க, காங்கிரஸ் முயற்சி செய்கிறது. கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவராக பதவி வகித்த அவர், சமீபத்தில் அந்த பணியில் ஓய்வு பெற்றார். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையையும் தாக்கல் செய்திருந்தார்.தேர்தல் போட்டி குறித்து ஜெயபிரகாஷ் ஹெக்டே கூறுகையில், ''லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. ''எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்து பேச வேண்டும். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன்,'' என்றார்.கடலோர பகுதிகளில் செல்வாக்குமிக்க தலைவராக ஜெயபிரகாஷ் ஹெக்டே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago