உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்: ரூ.25 கோடி பறிமுதல்

ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பணம்: ரூ.25 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்கண்டில் அமைச்சர் உதவியாளர் வீட்டில் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.25 கோடிக்கும் அதிகமான பணம் அமலாக்க துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்கண்டில் வரும் மே 13 மற்றும் 20 தேதிகளில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஆலம்கிர்ஆலம் உதவியாளர் சஞ்சீவ்லால் என்பவரது வீட்டில் பீரோவில் இருந்து கட்டு கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rmmvdsf2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், பணம் எண்ணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Godfather_Senior
மே 06, 2024 18:37

அந்த மந்திரி பேரை கேட்ட உடனே டவுட் வருது, அத்தனையும் நல்ல நோட்டா இல்லே கள்ள நோட்டுன்னு


spr
மே 06, 2024 17:46

தெருவோரம் வாகனங்களில் எடுத்துச் செல்லும் பணம் பொதுவாக சிறுகுறு வணிகர்கள் அன்றாடம் தங்கள் தொழிலுக்காக கொடுக்கல் வாங்கல் என்ற முறையில் எடுத்துச் செல்லும் பணமாக இருக்கலாம் வங்கிப் பரிவர்த்தனையில் வரவில்லை என்று சொல்லலாம் ஆனால் கறுப்புப் பணமாக இருக்காது தேவையில்லை சிறு தொகைகள் தேர்தலில் கொடுக்க எடுத்துச் செல்லும் பணம் என்று எண்ணத் தேவையில்லை ஆனால் இவர் போன்ற அரசியல்வியாதிகள் வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் கறுப்புப் பணமே என்பதில் சந்தேகமில்லை இப்படிக்கு கைப்பற்றப்படும் பணம் முறையாக அதிகாரிகளால் கணக்கு காட்டப்படுவதில்லை


ஆரூர் ரங்
மே 06, 2024 15:45

இன்றுவரை விவசாய நிலங்களை( எவ்வளவு கோடியெனாலும்)முழுக்க முழுக்க ரொக்கத்தில் விற்கவும் வாங்கவும் முடியும். விளைபொருட்களையும் கேஷாகவே பரிமாற்றவும் சட்டத்திலிடமுண்டு. இரண்டுக்கும் வருமான வரி கிடையாது. இதுதான் இப்போது கருப்புப்பணம் எளிதில் புழங்கக் காரணம். இந்த வழக்கிலும் அதே விதிகளின்படி தப்பி விடுவார்கள் .


Kuppan
மே 06, 2024 15:25

வழக்கமான மாநிலத்தின் முதல்வர் யார் எந்த கட்சி ஆட்சியில் உள்ளது போன்ற அறிமுக செய்தி?


Anantharaman Srinivasan
மே 06, 2024 14:30

ஜார்கண்டில் எந்த கட்சி ஆட்சி??


Ramanujadasan
மே 06, 2024 11:23

பிசாத்து பணம் இங்கே ஆயிரக்கணக்காக கோடியில் மாட்டும்


GMM
மே 06, 2024 09:49

மாநில கட்டுப்பாட்டில் போலீசார், தலைமை செயலாளர் இருக்க கூடாது நீதிமன்றம் அரசியல் சாசன கவர்னர், தேர்தல் ஆணையர், ஸ்டேட் வங்கியை கட்டுப்படுத்திவிட்டது மத்திய பிஜேபி சட்ட புத்தகம் படித்து கொண்டு வழி புரியாமல் விழிக்கிறது? மேற்கு வங்க கவர்னர் அலுவலக மீது போலீசார் சம்மன்? என்ன நிர்வாகம் இது? எந்த கட்சி ஆண்டாலும் நிர்வாகம் சிதையும் மாநில ஊழல் விருத்திக்கு தவறான நிர்வாக முறை முக்கிய காரணம் நிர்வாகம் விரும்பாத நீதிமன்ற வழக்கறிஞர்கள் தவறான கருத்து கூறி வாதிட்டு வருகின்றனர் இந்நிலையில், மத்திய அரசினால் ஊழலை குறைக்க முடியாது? எப்படி ஒழிக்க முடியும்?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை