உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு; பூமராங் ஆனது பா.ஜ., பிரசாரம்!

ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு; பூமராங் ஆனது பா.ஜ., பிரசாரம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி; ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் கருத்துக்கணிப்புகளை அப்படியே ஓரங்கட்டி காங்., ஜே.எம்.எம்., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து ஆச்சரியம் காட்டி உள்ளனர்.மற்ற மாநிலங்களை விட இயற்கை வளங்களில் முன்னிலையிலும், மக்கள் வாழ்க்கை தரத்தில் சற்றே பின்தங்கியும் காணப்படும் மாநிலம் ஜார்க்கண்ட். அரசியல் களத்தில் இம்மாநிலத்துக்கு என்று பல்வேறு காலநிலைகள் உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8sqg0667&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இம்மாநிலத்தின் முதல்வராக இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சட்ட விரோத பணபரிவர்த்தனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். முதல்வர் நாற்காலியை இழந்தார். சிறையிலும் அடைக்கப்பட்டார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர், முதல்வர் பதவியில் அமர்ந்தார். சிறையில் இருந்த காலத்தில் அவரின் இடத்தில் அவரது அதி தீவிர ஆதரவாளரான சம்பாய் சோரன் முதல்வராக அமர வைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியில் வந்த நிலையில், தமது ஆதரவாளர்களுடன் சம்பாய் சோரன், பா.ஜ.,வில் ஐக்கியமானார். முதல்வர் பதவி நாற்காலிக்கான சண்டையே இதற்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், எதை பற்றியும் கவலை கொள்ளாமல் மீண்டும் ஹேமந்த் சோரன், ஆட்சியை தொடர்ந்தார்.சட்டசபை தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பாக முதல்வர் நாற்காலியை வைத்து, நடைபெற்ற ஆடுபுலி ஆட்டங்களை மக்கள் நன்றாக கண்டிருந்தனர். எனவே நாற்காலி சண்டையின் எதிரொலியாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மண்ணை கவ்வும், பாஜ., அசால்ட்டாக அரியணை ஏறும் என்றெல்லாம் அரசியல் விமர்சகர்கள் கருத்துகள் கூறி இருந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அப்படியே தான் கூறின.ஆனால், பா.ஜ., கூட்டணியை மக்கள் லெப்ட் ஹேண்டில் டீல் செய்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வெற்றியை அளித்து உள்ளனர். கனிம வளங்கள் அதிகம் கொண்ட இம்மாநிலத்தில் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 27 சதவீதம் ஓட்டுகள் பழங்குடியின மக்கள் வசம் உள்ளது. அவர்களின் ஆதரவு பெற்றவர்களால் மட்டுமே ஆட்சியில் அமர முடியும் என்ற நிலை இப்போதும் உள்ளது.இதனால் ஹேமந்த் சோரனுக்கு எதிராக பா.ஜ., மேற்கொண்ட செயல்பாடுகள், பிரசாரம் ஆகியவை, அக்கட்சிக்கு எதிராக பூமராங் ஆக திரும்பி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஒட்டு மொத்தமாக உள்ள 28 பழங்குடியின தொகுதிகளில் 3ல் 2 பங்கு தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவை அளித்து இருக்கின்றனர். இதனால் ஜே.எம்.எம்., தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி, மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 23, 2024 19:00

துரோகி ஷாம்பு சோரன் சோரம் போயி வீழ்ந்தார் இது எல்லோருக்கும் பாடம்


Bala
நவ 23, 2024 20:52

அப்படியெல்லாம் துரோகி என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. அண்ணாவுக்கு பிறகு நாவலர் நெடுஞ்செழியன்தான் திமுகவை வழிநடத்தியிருக்க வேண்டும். ஆனால் பல காரணங்களால் நெடுஞ்செழியன் பின்னுக்கு தள்ளப்பட்டு கருணாநிதி அவர்கள் அந்த இடத்தை பிடிக்க வில்லையா? பிறகு எம்ஜியாருக்கும் திமுகவில் துரோகம் இழைக்கப்பட்டது என்றுதான் அதிமுக உருவானது. அரசியலில் துரோகமெல்லாம் சாதாரணமாகிவிட்டது.


Sundar R
நவ 23, 2024 18:46

ஜார்க்கண்ட் பிஹாரில் இருந்து பிரியும் முன்பு லாலுவின் கை பலத்தில் இருந்தது. பிறகு சிபு சோரன் பாஜகவைத் தவிர மற்ற எல்லா கட்சிகளுடனும் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். பிறகு ஹேமந்த் சோரன் வந்தவுடன் பாஜக & காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைக்க ஆசைப்பட்டார். அதற்காக தெலங்கானாவின் கேசிஆரிடம் போய் ஆலோசனை கேட்டார். அது வெற்றி பெறவில்லை. அதனால், காங்கிரஸுடன் கூட்டணியை தொடர்கிறார். இத்தனை சர்க்கஸ் களை ஹேமந்த் சோரன் காட்டிய போதிலும் அவரே தொடர்ந்து வெற்றி பெறக் காரணம் அங்கு இவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு எதிரான கட்சிகள் ஒற்றுமையுடன் இல்லாததே காரணம். இந்த ஜனவரி 2024-ல் அமலாக்கத்துறையினால் சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் ஜூன் 2024-லேயே பெயில் வாங்கி சாம்பார் சோரனை அகற்றிவிட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட்டார். எதிர்கட்சியினர் அனைவரும் பிரிந்து இருந்ததால் யாரும் கேள்வி கேட்கவில்லை. 2024 சட்டமன்றத் தேர்தலில் ஹேமந்த் சோரன் காங்கிரஸுடன் கூட்டணியை வைத்துக் கொண்டு பெரிய வெற்றியை பெற்று விட்டார். நாம் கவனிக்க வேண்டியது எதிர்கட்சிகளின் ஒற்றுமையின்மைதான். இது தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு நல்ல பாடம்.


kantharvan
நவ 23, 2024 18:11

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு இதைத்தான் சொல்கிறது இல்லையா?? நண்பா சங்கர் .


sankar
நவ 23, 2024 20:29

ஆகா நீங்கள் அந்த கொள்ளையனை சோரன் ஆதரிக்கிறீர்களா - இருநூறு என்பது தெளிவாகிவிட்டது


S.Martin Manoj
நவ 23, 2024 15:57

மணிப்பூரில் ஆட்சிக்கு வந்து மத தீவிரவாதம் செய்பவர்கள் ஜர்கண்டில் வராமல் போனது அந்த மாநிலத்திற்கு நல்லது


sankar
நவ 23, 2024 13:43

ஒரு கொள்ளையன் வெற்றி பெறுவது சிறப்பான செய்தி அல்ல


SANKAR
நவ 23, 2024 15:07

correct ..BJP lost..good news!


sankar
நவ 23, 2024 15:50

ஹேமந்த் சோரன் கொள்ளையன் இல்லையா - இருநூறுக்கு கூவுற கோஷ்டி


kantharvan
நவ 23, 2024 18:13

மகாராஷ்டிரா தேர்தல் முடிவை பார்த்த பின்புதான் இப்படி தோன்றியதா?


புதிய வீடியோ