உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் நைஜர் நாட்டில் கடத்தல்

ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் நைஜர் நாட்டில் கடத்தல்

புதுடில்லி: ஜார்க்கண்டின் கிரிதி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து தொழிலாளர்கள், கடந்தாண்டு மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜருக்கு வேலைக்கு சென்றனர். சஞ்சய் மஹ்தோ, பால்ஜித் மஹ்தோ, ராஜு மஹ்தோ, சந்திரிகா மஹ்தோ மற்றும் உத்தம் மஹ்தோ ஆகிய ஐந்து பேரும் அங்குள்ள 'கல்பதாரு பவர் டிரான்ஸ்மிஷன்' நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நைஜரில் ஆயுதக் குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் மோதல் நடந்து வரும் நிலையில், அங்கு பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இந்த சூழலில், ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த முகாமிற்கு, கடந்த 25ம் தேதி வந்த ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கிருந்த ஆறு பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கவலை அடைந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், கடத்தப்பட்டவர்களை பத்திரமாக மீட்டுத் தர வேண்டும் என மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து, நைஜரில் கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு உதவ வேண்டும் என அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை