உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய நீதிபதி : விளக்கம் கேட்டு டி.ஜி.பி.க்கு சம்மன்

போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய நீதிபதி : விளக்கம் கேட்டு டி.ஜி.பி.க்கு சம்மன்

ராஞ்சி: போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொண்டதால் ஆத்திரமடைந்த ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் திவேதி, அம்மாநில டி.ஜி.பி.க்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரும் சஞ்சய் குமார் திவேதி, கடந்த 23-ம் தேதி காலை வழக்கம் போல தன் இல்லத்திலிருந்து காரில் புறப்பட்டு உயர்நீதிமன்றம் சென்றார்.அப்போது இவர் செல்லும் சாலையில் பா.ஜ., யுவ மோர்ச்சா எனப்படும் இளைஞர் அணியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.இதனால் மாற்று பாதையில் இவர் சென்ற கார் கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. இதனால் சரியான நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் அவதியுற்றார்.இதையடுத்து மாநில காவல்துறை டி.ஜி..பி., அனுராக் குப்தாவிற்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். முறையாக அறிவிப்பு இல்லாமல் சரியான முறையில் போக்குவரத்தை சரியாததால் தாம் குறிப்பிட்ட நேரத்திற்கு நீதிமன்றம் செல்ல முடியாமல் தாமதம் ஏற்பட்டு விட்டதாக புகார் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sankaran Srinivasan
ஆக 29, 2024 14:06

தினமும் இவர் நடந்தோ பஸ்ஸில்லோ உயர் நீதிமன்றம் சென்று வர வேண்டும் மக்கள் படும் அவஸ்தை அப்போதாவது புரியும்.


பேசும் தமிழன்
ஆக 29, 2024 08:00

தங்களுக்கு வந்தால் தான் ரத்தம்..... அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்டினி..... அப்படி தானே கனம் நீதிபதி அவர்களே ???


aaruthirumalai
ஆக 28, 2024 14:55

இவனுக்கு வந்தா இரத்தம் மற்றவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா சட்னியா


அப்பாவி
ஆக 28, 2024 07:47

தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தச்த்தான் தெரியும். இதுக்கு அரடியல்வாதிகளும், இப்போ நீதிபதிகளும் சேந்துக்கிட்டாங்க. அதுசரி... வாய்தா தானே குடுக்கப் போறாரு? என்ன அவசரம்?


Kasimani Baskaran
ஆக 28, 2024 05:33

வழக்குகள் ஏதோ இவர்கள் ராக்கெட் வேகத்தில் முடிவு செய்து விடுவது போலவும் இந்த போக்குவரத்து இடைஞ்சல் உலகை சில பாகைகள் திருப்பி விட்டதாக உருட்டுவது ரொம்பவே ஓவர்.


Mani . V
ஆக 28, 2024 04:11

இப்படித்தானே வரி கொடுக்கும் ஒவ்வொரு மக்களும் சாகிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு தெரிவதில்லை. இவர்களும் மனிதர்கள்தானே? அனைவரும் சமம் என்று எப்பொழுது பார்க்கப்படுதோ அப்பொழுதுதான் நாடு உருப்படும்.


Srinivasan Narasimhan
ஆக 28, 2024 04:04

சாமான்ய மக்கள் எல்லா தினமும் எப்படி தின்டாடுகிறோம் விஐபி கலாசாரத்தில் நடிகர் வந்தால் கட்சி ஆட்கள் முதல்வர் பிரதமர் இப்படி


சமீபத்திய செய்தி