உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

ஜூன் 4 வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும்: சொல்கிறார் அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கரிம்நகர்: தேர்தல் முடிவு வெளியாகும் ஜூன் 4ம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்ததை அடுத்து கேரளாவில் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். கடந்த ஏப்.,26ல் கேரளாவிலும் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அங்குள்ள கரிம்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை செய்தியாளரிடம் கூறியதாவது: மோடி அலை வலுவான நிலையில் இருக்கிறது; இது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ஜூன் 4 (தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள்) ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாளாக இருக்கும். லோக்சபா தேர்தலில் தென்னிந்தியா முழுதும் மோடி அலை வீசப்போகிறது. இதுவரை இல்லாத அளவாக அதிக இடங்களில் பா.ஜ., வெற்றிப்பெறும். காங்கிரசுக்கு 50க்கும் குறைவான இடங்களே கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

Durai
மே 09, 2024 13:03

திரு அண்ணாமலை M P


ஜெய்ஹிந்த்புரம்
மே 09, 2024 11:14

பிரியாணி கிடைக்கும் என்று கனவு காண்கிறதா? ஹா ஹா


ஜெய்ஹிந்த்புரம்
மே 09, 2024 11:09

எங்கேயாவது கவர்னராக போடுவார்கள் என்று கனவு


Sundar
மே 08, 2024 09:32

அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை தான்


Indian
மே 08, 2024 08:42

உண்மை தான்


MADHAVAN
மே 07, 2024 12:28

ஊரு பேர கெடுக்கருதுக்குன்னே இருக்கும் நபர், நா கூசாமல் பொய் பேசுவதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை


MADHAVAN
மே 07, 2024 12:24

பொய் மட்டும்தான் சொல்ல தெரியும் என்பது நிரூபணம் ஆகிவிட்டது,


kumaraswamy
மே 07, 2024 01:57

% true


Ayyavu Uthirasamy
மே 06, 2024 21:37

நீ தினமம் படித்து ரொம்ப புத்திசாலியாக இருப்பாய் போலவேஇந்தியாவின் விடிவுகாலம் ஜூன் க்கு பிறகு, பாஜக வின் தோல்வியின் மூலம்


Kannan rajagopalan
மே 06, 2024 20:28

நாட்டுக்கு சாப விமோசன நாள் ஆண்டுகள் பட்ட கஷ்டம் தீர, அந்த நாளும் வந்திடாதோ


AK
மே 06, 2024 20:46

Vaaippilla Raja Vaaipilla.. nee Jelusil vaangi mulungu.. Burnal vaangi thadavu..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ