உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடையில்லை

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: சி.பி.ஐ., விசாரணைக்கு தடையில்லை

புதுடில்லி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது. இது குறித்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சுகுணாபுரத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., நடத்த தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க., பா.ஜ., பா.ம.க., உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்த கட்சியின் சார்பில் தனித்தனியே சென்னை ஐகோர்ட்டில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q8gv7tgd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட்டனர். போலீசாருக்கு தெரியாமல் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பு இல்லை. தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கவும் தமிழக போலீசாருக்கு உத்தரவிட்டனர்.இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தமிழக போலீசாரின் விசாரணை முடிந்துவிட்டது. தமிழக போலீசாரின் விசாரணையில் எவ்வித தவறும் இல்லை என விளக்கம் கொடுத்தார்.இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு, சென்னை ஐகோர்ட் உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், கள்ளச்சாராய வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Mohanakrishnan
டிச 17, 2024 22:29

நல்ல அடி


chinnamanibalan
டிச 17, 2024 20:43

ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொண்டால் மட்டுமே, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியும். கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய சாவுகள் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாடறியும். எனவே சிபிஐ விசாரணை சரியானதே. அதேவேளையில் சிபிஐ விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும்.


Sudha
டிச 17, 2024 19:37

விசாரணை தேவையில்லை.பலியானவர்கள் மறுபிறவி எடுத்து, குடிக்கும் வயதை அடையும் வரை எந்த தீர்ப்பும் வராது


அப்பாவி
டிச 17, 2024 18:58

எவன் விசாரிச்சாலும் உண்மை வெளியே வரப்போவதில்லை. தப்பு செஞ்சவனுக்கு தண்டனையும் கிடைக்கப் போவதில்லை. பத்து லட்சம் கிடைக்க வேண்டியவனுக்கு கிடைச்சாச்சு. மக்கள் திருந்தப் போவதில்லை. விசாரணைன்னு நேரத்தை வீணாக்காதீர்கள்


M S RAGHUNATHAN
டிச 17, 2024 18:16

அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். அதுவும் தள்ளுபடி ஆனால் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அரசு முறையிடும். அதுவும் தள்ளுபடி ஆனால் சத்த சபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்படும்.


sankaranarayanan
டிச 17, 2024 17:13

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுத்துவிட்டது இது விசாரிக்கவே பல மாதங்கள் ஆகிவிட்டன. இந்த கால கட்டங்களில் சாராயத்திற்கு ஆளானவர்களில் பாதிபேர் இருப்பார்களோ இல்லையோ தெரியாது பிறகு இந்த வழக்கு வழக்கம்போல் தள்ளுபடி செய்தும் முடிந்து விடும்


என்றும் இந்தியன்
டிச 17, 2024 17:03

-திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசுன்னா இப்படித்தான் இருக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் -கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு விசாரணையை சி.பி.ஐ., விசாரிக்க தடை விதிக்க தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு


selvelraj
டிச 17, 2024 17:00

ஐயா, துப்பினாலும் துடைத்துவிட்டு செல்வதுதான் இவர்கள் வழி. அவங்கிட்ட போயி நாக்கை புடுங்க வேண்டும் என்றால்...


Palanisamy Sekar
டிச 17, 2024 16:30

நீதிமன்றங்கள் எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்கள் பக்கமே இருக்காது சிபிஐ என்றாலே அலர்ஜி இந்த திராவிட மாடலுக்கு. அதனால்தான் ஆட்சிக்கு வந்ததுமே சி பி ஐ க்கு தடை விதித்தனர் திராவிட மாடல் ஆட்சியாளர்கள். இப்போது சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என்கிற தீர்ப்பு தமிழக அரசுக்கு ஒரு சவுக்கடிதான். தமிழக அரசின் முகத்தில் கரிபூசப்பட்டுவிட்டது. சொல்லப்போனால் ஸ்டாலின் இதற்கு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இப்போது கள்ளச்சராயம் விற்ற கட்சிக்காரர்களுக்கு பாதுகாக்க யாருமே இல்லை. திமுகவை விட்டு விலகிச்சென்றாலும் கூட சிபிஐ விடாது. குறிப்பாக சொல்லப்போனால் சாராய அமைச்சர் மீண்டும் ஜெயிலுக்கு போனாலும் ஆச்சர்யமில்லை. ஆட்சியா இது? இவ்வளவு மோசமான ஆட்சியை கருணாநிதி கூட கொடுத்ததில்லை. இந்த தேசம் செய்த பாவமோ என்னவோ..இந்த திராவிட மாடல் ஆட்சியை அடுத்தமுறை அழித்தே திறனும் என்பதுதான் இந்த முடிவுகள் காட்டுகின்றன .ஒழிஞ்சா சரி


Oru Indiyan
டிச 17, 2024 16:26

இப்படி அசிங்கப்படுவதற்கு அவமானப்படுவதற்கு பதில் நாக்கை பிடுங்கி கொள்ளலாம். வெட்கம் இல்லாதவர்கள்.


முக்கிய வீடியோ