உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்ல கர்நாடக பக்தர்களுக்கு உதவித்தொகை

வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்ல கர்நாடக பக்தர்களுக்கு உதவித்தொகை

பெங்களூரு: ''வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் கர்நாடக பக்தர்களுக்கு, உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.பெங்களூரில் ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தலைமையில், நேற்று மாநில சமய பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்: ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலுக்கு செல்லும் கர்நாடகா பக்தர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வக்பு சொத்து பிரச்னை ஏற்பட்டு உள்ளதால், ஹிந்து அறநிலைய துறையின் கீழ் உள்ள கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுத்து, உடனடியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு பெங்களூரு எம்.எஸ்.கட்டடம் எதிரில் உள்ள அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், 10 கோடி ரூபாய் செலவில், சமய கட்டடம் கட்டுதல் மைசூரு சமஸ்கிருத மஹாராஜா கல்லுாரியை சீரமைக்க, தேவையான மானியம் வழங்கப்படும் அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை கண்டுபிடித்து, அந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால், மீட்க நடவடிக்கை விரைவில் பதவி காலம் முடியவுள்ள 14 கோவில்களின் நிர்வாக கமிட்டிக்கு, நிர்வாக அதிகாரியை நியமிக்க முடிவு பேலுார் ஸ்ரீசென்னகேசவா கோவில் நிர்வாக கமிட்டியில் காலியாக உள்ள பதவிக்கு விரைவில் உறுப்பினர்களை நியமிக்க முடிவு.ராமலிங்க ரெட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை