உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடக அரசு பள்ளிகளில் கடலை மிட்டாய் நிறுத்தம்?

கர்நாடக அரசு பள்ளிகளில் கடலை மிட்டாய் நிறுத்தம்?

பெங்களூரு,'குழந்தைகளின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வந்த கடலை மிட்டாய் நிறுத்தப்பட உள்ளது' என, கர்நாடக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கர்நாடக அரசு பள்ளிகளில், ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியர் பள்ளிக்கு வந்ததும் காலையில் பால், மதியம் சத்துணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படுகிறது.முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு, வாழைப்பழம் அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மதிய உணவுத் திட்டம் குறித்து ஆய்வு நடத்திய தார்வாட், கலபுரகி மாவட்ட கல்வித்துறை கூடுதல் கமிஷனர்கள், கல்வித்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.அதில், 'மாணவர்களுக்கு வழங்கப்படும் கடலை மிட்டாயில் அதிகப்படியான கொழுப்பு, சர்க்கரை உள்ளது. இதை தினமும் சாப்பிடுவது, மாணவர்களின் ஆரோக்கியத்துக்கு தீங்கை ஏற்படுத்தும். மேலும், இந்த மிட்டாய்கள் சுகாதாரமற்ற முறையில் வழங்கப்படுகின்றன. இதை உடனடியாக நிறுத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளனர்.இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை கமிஷனர் திரிலோக் சந்தர் கூறுகையில், ''தினமும், 55 லட்சம் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதில், 30 சதவீதம் பேர் கடலை மிட்டாய் அல்லது வாழைப்பழம் சாப்பிடுகின்றனர். ''கடலை மிட்டாயின் அளவு, தரம் குறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே, கடலை மிட்டாயை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ram pollachi
பிப் 19, 2025 15:51

குடிசை தொழிலில் சுகாதாரத்தை தேடினால் கண்ணும், வயிறும் நிரம்பாது.


Ram pollachi
பிப் 19, 2025 15:47

வெளிநாட்டு சாக்லேட்களில் பெரும்பாலும் நிலக்கடலை பயன்பாடு உள்ளது. உப்பு சேர்த்து வறுத்த நிலக்கடலை சாப்பிட்ட உடன் சிறிது வெல்லத்தை சாப்பிட்டால் பித்தம் தலைக்கு ஏறாது.... பச்சை நிலக்கடலை சாப்பிட்டால் வயிற்றில் உள்ள நாள்பட்ட கழிவுகள் வெளியேறும். வேக வைத்து சாப்பிட்டால் எந்த பாதிப்பும் இல்லை. முன்பு பொள்ளாச்சியில் அதிகமாக சாகுபடியானது... தற்போது கடலை மிட்டாய் தயாரிப்பு மட்டுமே நடக்கிறது...


MUTHU
பிப் 19, 2025 09:45

பிள்ளைகளை தினமும் ஒருமணி நேரம் ஓடியாடி விளையாட விட்டால் கொழுப்பு தானே எரிக்கப்பட்டு விடும்.


RAMAKRISHNAN NATESAN
பிப் 19, 2025 09:37

தமிழக மன்னரின் மாண்புமிகு அறிவாளிகள் கூட்டம் போகும் வேகத்தை விட அவர்கள் போகும் வேகம் அதிகம் .....


visu
பிப் 19, 2025 08:58

வேர்கடலை பரப்பி என்ன ஒருநாளைக்கு ஒரு கிலோ கொடுப்பார்களா ஒரு குழந்தைக்கு பட்சம் இரெண்டு அல்லது 3 துண்டு இதனால் பிரச்சினை வரும் என்பது அறிவியல் கண்டு பிடிப்பு


rama adhavan
பிப் 19, 2025 08:39

பள்ளி குழந்தைளுக்கு உணவு திட்டம் தேவை இல்லாதது. ஊழலின் உற்று. பண விரயம்.


MUTHU
பிப் 19, 2025 09:30

அது முக்கியமல்ல. பிள்ளை பெறுகின்றவன் நல்ல உணவளிப்பது தனது கடமை என்று தெரியாமல் இருந்துகொண்டு விடுவது தான் மகா கேவலம். அரசாங்கம் எப்படி நல்ல உணவளிக்கும். நல்ல உணவளிப்பது பெற்றவன் கடமையல்லவா. தரமற்ற உணவு தரமற்ற உடல். தரமற்ற உடல் தரமற்ற மனம். தரமற்ற மனம் தரமற்ற எண்ணங்கள். தரமற்ற எண்ணங்கள் தரமற்ற செயல்கள். இதை புரிந்தால் மட்டுமே இந்தியர்களால் புதிய இந்தியா படைக்க முடியும். அல்லது தரமற்ற அரசாங்கங்களையே உருவாக்க முடியும். தரமற்ற மக்களே உருவாகிக்கொண்டிருப்பர்.


ரவிகௌடா
பிப் 19, 2025 07:04

கடலை முட்டாய் ஊழல். யார் ஆட்சியில் இருந்தாலும் நடக்கும். தினசரி முட்டை சாப்பிட்டால் கொழுப்பு வராதாம்.


பாமரன்
பிப் 19, 2025 06:21

ரோட்டில் பஸ் போவதால் தான் விபத்துகள் ஏற்படுது... அதனால் பஸ்கள் ரோட்டில் ஓடுவதை நிறுத்தனும்னு யாரோ சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து வந்த ஆபீஸர் அடுத்த அறிவிப்பு செய்வார்ன்னு எதிர் பார்க்கலாம்....


Svs Yaadum oore
பிப் 19, 2025 08:40

இந்த காங்கிரஸ் விடியல் திராவிடனுங்க ஆட்சி என்றாலே இப்படித்தான் ......எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் இருக்கும் ....விடியல் திராவிடனுங்க என்றால் கடலை மிட்டாயை எறும்பு தின்று விட்டது என்று அவனுங்க தின்னுவார்கள் ...


sundarsvpr
பிப் 19, 2025 05:33

தோலுடன் கடலை சாப்பிடுவது நல்லது. முதலில் இதனை ஊர்ஜிதம் செய்து இத்துடன் நாட்டுச்சக்கரை அல்லது வெல்லம் வழங்கலாம். உடல் உழைப்பு இல்லாவிடில் சக்கரை கெடுதல். சிறு குழந்தைகள் 10 நிமிடம் நடை பயிற்சி அளிக்கலாம். எவ்வளவு கவனம் செலுத்தினாலும் அரசு கொள்முதலில் நேர்மை வேண்டும்.


MUTHU
பிப் 19, 2025 10:29

தினசரி மாமிசம் சாப்பிடுபவன் கூட எழுபது எண்பது வயதுவரை கிழங்கு போல் இருக்கின்றான்.


Bye Pass
பிப் 19, 2025 04:37

உளுந்தங்கஞ்சி கொடுக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை