உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம்! கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி

சுற்றுலாவில் நிகழ்ந்த சோகம்! கடலில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோலார்; கர்நாடகாவில் பள்ளி சுற்றுலா சென்ற போது கடலில் குளித்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோலார் மாவட்டத்தில் உள்ள பிரபல பள்ளியில் படிக்கும் 54 மாணவிகள் பள்ளிச் சுற்றுலா சென்றனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள், முருடேஸ்வரர் கோவில் கடற்கரைக்கு பொழுதை கழிக்க சென்றனர்.அவர்களில் 7 மாணவிகள் ஒன்றாக கடற்கரையில் குளிக்க இறங்கி இருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடல் அலையில் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர். அபயக்குரல் எழுப்பிய மாணவிகளை கண்ட ஆசிரியர்கள், கடலில் குதித்து காப்பாற்ற முயன்றனர்.நீண்ட நேர போராட்டத்தில் 7 மாணவிகளில் 3 பேரை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. ஸ்ரீவந்ததி, தீஷிதா, வந்தனா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழத்தனர். காப்பாற்றப்பட்ட யசோதா, வீக்ஷனா, லிபிகா ஆகியோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்டோர் மருத்துவனைக்கு சென்று நிலைமையை கேட்டறிந்தனர். வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sankar SKCE
டிச 12, 2024 14:57

இந்த சோகமான நிகழ்வுக்கு ஒரு... பெண்களை இழிவாக பார்க்கும் ஒரு... "இந்தியாவில் ஏற்கனவே பெண்களின் விகிதாச்சாரம் குறைவு.." இப்படி கருத்து சொல்லியிருக்கான்.


Sudha
டிச 11, 2024 11:13

சுற்றுலா இடங்களில் அரசின் பாதுகாப்பு வசதிகள் கேள்விக்குறி. திருட்டு, கடத்தல் மது கஞ்சா பாலியல் அனைத்து குற்றங்களையும், சாலை மற்றும் இதுபோன்ற உயிரிழப்பு களையும் எங்கும் கேள்விப்படுகிறோம். சுற்றுலா துறைகள் செய்யா வேண்டியன நிறைய உள்ளன


Veeraraghavan Jagannathan
டிச 11, 2024 10:30

அழைத்துச் சென்ற ஆசிரியர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Barakat Ali
டிச 11, 2024 10:07

இந்தியாவில் ஏற்கனவே பெண்களின் விகிதாச்சாரம் குறைவு .....


Sankar SKCE
டிச 12, 2024 14:58

பாகிஸ்தானுக்கு போ. நிறைய பேர் இருப்பாங்க


chennai sivakumar
டிச 11, 2024 09:55

இவ்வாறு குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்லும் போது அது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக ட்ரெக்கிங், பீச் போன்ற இடங்களில்


Nandakumar Naidu.
டிச 11, 2024 09:49

சோகமான செய்தி. அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈஸ்வரனை பிரார்த்திப்போம். அவர்களின் குடும்பங்களுக்கு இந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள சக்தியை கொடுக்க இறைவனை பிரார்த்திப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை