உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆரோக்கியமும் ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்: வெளிநாட்டு பிரதிநிதிகள் நெகிழ்ச்சி

ஆரோக்கியமும் ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்: வெளிநாட்டு பிரதிநிதிகள் நெகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: 'இந்திய தேர்தல், ஆரோக்கியமும், ஜனநாயகமும் மிகுந்த தேர்தல்,' என ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஓட்டுப்பதிவை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீரில் இன்று 2வது கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தேர்தல் எப்படி நடைபெறுகிறது என்பதை காண, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர் உள்ளிட்ட 16 நாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களை இந்திய வெளியுறவுத்துறை வரவேற்றது.அவர்கள், தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்த தொகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். வாக்காளர்கள் மத்தியில் நிலவும் உற்சாகம், வேட்பாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் கண்டறிந்தனர்.பார்வையாளராக வந்திருந்த அமெரிக்க குழு துணை தலைவர் ஜோர்ஹன் ஆண்ட்ரூஸ் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை நேரில் காணும் போது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. தேர்தல் முடிவுகளை காணவும் ஆர்வம் மிகுதியாக உள்ளது.இதை காணும் போது இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.இவ்வாறு அவர் பேசினார்.கொரியா நாட்டு பிரதிநிதி சாங் வூ கூறுகையில், ''இளஞ்சிவப்பு (பிங்க் நிறம்) ஓட்டுச்சாவடியில் செயல்படும் நிர்வாகிகள் அனைவரும் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அனுமதி அளித்த இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்கள்.காஷ்மீருக்கு நாங்கள் வந்தது இது தான் முதல் முறை. வெளிநாட்டு பிரதிநிதியாக இங்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள இடங்கள் மிகுந்த அழகாகவும், மக்கள் பழகுவதற்கு இனிமையானவர்களாகவும் உள்ளனர்,'' என்றார்.சிங்கப்பூர் பிரதிநிதி செங் வீ வீ ஆலிஸ் கூறுகையில், ''நான் இங்கு ஓட்டு போடுபவர்களை பார்த்தேன். சிங்கப்பூரில் இதே மாதிரி நடைமுறையை கொண்டு வர முயற்சிப்போம். இங்குள்ள அரசு கட்டிடங்களை ஓட்டுச்சாவடிகளா பயன்படுத்துவது, அது வாக்காளர்கள் எளிமையாக பயன்படுத்துவது மிகவும் நன்றாக இருந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

spr
செப் 25, 2024 22:15

"இந்தியாவில் நடைபெறும் தேர்தல் நடைமுறைகள், மிகவும் ஆரோக்கியமாகவும், மிகுந்த ஜனநாயகத்தை கொண்டதாகவும் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது." ஒரு நாள் வந்து பார்த்த வெளிநாட்டார் பாராட்டுவது சிறப்புதான் என்றாலும், உள்ளே புரையோடிப் போயிருக்கும் ஊழல் அன்றாடம் பார்க்கும் நமக்கல்லவா தெரியும் "கவர்களில்" முகவரி எழுதி தேர்தலில் வாக்காளர் பட்டியல்படி தொகுதிவாரியாக அடுக்கி வைத்ததாகச் சொல்லப்படுபவர் இன்னமும் அமைச்சராகத்தானே இருக்கிறார்.


Ramesh Sargam
செப் 25, 2024 20:49

வெளிநாட்டு பிரதிநிதிகள் மகிழ்ச்சி. ஆனால் உள்நாட்டு தேசதுரோகிகளுக்கு நடந்து முடிந்த தேர்தல் மகிழ்ச்சி அளிக்கவில்லையே...


S.L.Narasimman
செப் 25, 2024 20:13

நல்ல வேளை நம்ம தமிழ்நாட்டூ தேர்தலை பார்க்கவில்லை.ஓட்டுக்கு பணம் 2000, சாராயம், பிரியாணி, கொலுசு, மாட்டு கொட்டாயிளை மாசக்கணக்கில்அடைத்து வைப்பதுன்னு தெரிந்தால் நாறி போயிரும் நாறி..


சாண்டில்யன்
செப் 25, 2024 20:03

தேர்தல் ஒட்டு எண்ணிக்கையை இவர்கள் பார்வையிட வேண்டும் அப்போது இவர்கள் கருத்து தலை கீழாகிவிடுமே


Barakat Ali
செப் 25, 2024 19:28

இத்தாலிய இளவரசரின் வாதங்கள் உடைபடுகின்றன ....


karthik
செப் 25, 2024 18:42

பப்புவை பார்த்தா சொல்லுங்க.. இன்னும் 10 15 ஆண்டுகளினுள் காஷ்மீர் சுற்றுலா மற்றும் ஆன்மீக யாத்திரயில் சிறந்து விளக்க போகிறது


karthik
செப் 25, 2024 18:18

ஆனால் தேச விரோத காங்கிரஸ் கட்சி சொல்லும் இது மோடியின் தேர்தல். ஜனநாயக தேர்தல் இல்லை .


முக்கிய வீடியோ