உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனை

காஷ்மீர் நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரில் சில நாட்களாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்க ராணுவ வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. சோதனை சாவடிகள் அமைத்து ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இச்சூழ்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூலை 18, 2024 20:42

நேரு இருக்கவே இருக்காரு பழிபோட.


Narayanan Muthu
ஜூலை 18, 2024 18:28

தீவிரவாத தாக்குதல்கள் அறவே ஒழிக்கப்பட்டுவிடும் என உறுதி கூறியபின்னர் தினம் ஒரு தாக்குதல் என்பது நடைமுறை ஆகிவிட்டது. இனியும் ஆலோசனை செய்யாமல் இருக்க முடியுமா


hari
ஜூலை 18, 2024 21:43

கள்ளசாராயம் ஒளிந்தால் தீவிரவாதம். ஒழியும் நாராயணா


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி