உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வளர்ச்சியை வேகப்படுத்தும் கதிசக்தி: பிரதமர் பெருமிதம்

வளர்ச்சியை வேகப்படுத்தும் கதிசக்தி: பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும் நம் முயற்சியை துரிதமாக்க, கதிசக்தி திட்டம் உதவுகிறது' என, பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.நம் நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக கடந்த 2021-ல் கதிசக்தி திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன்படி ரயில்வே, சாலை, துறைமுகங்கள் உள்ளிட்ட 16 அமைச்சகங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்த நேரத்தில் நிறைவு பெறாமல் திட்டச் செலவு அதிகரிப்பது, நாட்டின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கதிசக்தி திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, திட்டப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா, டில்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றதுடன், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தன் பாராட்டுகளை தெரிவித்தார். முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதாவது:நம் நாட்டில் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்தும் நோக்கில் பிரதமரின் கதிசக்தி திட்டம் துவங்கப்பட்டது. பல்வேறு அமைச்சகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை, நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதுடன், முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல பெரிதும் உதவுகின்றன; பலருக்கும் வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருகிறது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

K.n. Dhasarathan
அக் 15, 2024 10:47

யாருடைய வளர்ச்சியை அதிகப்படுத்தும் கதி சக்தி? ஏற்கனவே அறுநூறாவது இடத்தில் இருந்த அதானி இப்போது முதலாவது இடத்தில் இருக்கிறார் இந்தியா பணக்காரர்கள் வரிசையில், ஒஹோ உலக பணக்காரர் வரிசைக்கு போக சொல்கிறாரோ? ஐயா, நம் நாட்டை பற்றி கொஞ்சம் சிந்தியுங்கள், ஏழ்மை வரிசையில் நம் நாடு இலங்கைக்கு, பர்மாவுக்கு, வங்காள தேசத்திற்கு பின்னால் நிற்கிறது, மக்கள் தெரியாமல் ஒட்டு போட்டு உங்களை கொண்டு வந்து விட்டார்கள், அவர்களை மன்னித்து, ஏதாவது நல்லது செய்ய பாருங்கள்.


venugopal s
அக் 14, 2024 17:06

இந்த நாடு இன்னுமா இவரை நம்பிக் கொண்டு இருக்கிறது?


Kasimani Baskaran
அக் 14, 2024 05:30

பல துறைகள் தான் போக்கில் வேலை செய்ததை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகி இருக்கிறது. எப்படியோ இவர்களாவது ஒருங்கிணைத்தார்களே என்று சந்தோசப்பட வேண்டும்.


கிஜன்
அக் 14, 2024 04:58

சிறப்பு .... இந்த ஒருங்கிணைப்பு இல்லாததால் .... வட மற்றும் தென் சென்னையை இணைக்கும் .... கடற்கரை -எழும்பூர் நான்காவது ரயில் பாதை வருடக்கணக்கில் நடந்துகொண்டிருக்கிறது .... வங்கி வாங்கி... ராணுவம் ... தமிழக அரசு .... என சுத்த விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை