உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

கெஜ்ரிவால், கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் பிஆர்எஸ் கட்சி எம்.பி.,யும் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளுமான கவிதாவையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sxkpmmyu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இருவரும் திஹார் சிறையில், நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு உள்ளனர். கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கவிதாவின் ஜாமின் மனு மே 2ம் தேதி அன்று டில்லி நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய கெஜ்ரிவாலின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.இந்நிலையில் கெஜ்ரிவால் மற்றும் கவிதா ஆகியோரின் நீதிமன்றக்காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மே 7 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்

டில்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள கெஜ்ரிவால் நீண்ட நாட்களாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறையில் இன்சுலின் வழங்க வேண்டும் எனக்கூறி வந்தார். இந்த மருந்தை வழங்க சிறை நிர்வாகம் மறுத்து வந்ததாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில், கெஜ்ரிவாலின் சர்க்கரை அளவு 320 ஐ தாண்டியதைத் தொடர்ந்து, இன்று அவருக்கு இன்சுலின் மருந்து வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

krishna
ஏப் 23, 2024 21:24

NAMMA SENTHIL BALAJI POLA JAAMIN KETTU HALF CENTURY ADIKKA VAAZHTHUKKAL.


செல்வேந்திரன்,அரியலூர்
ஏப் 23, 2024 18:20

அது வரையில் இந்த ஒயிட் காலர் திருடனுக்கு சுகர் ஏறாமல் பாத்துக்கங்க ஏன்னா இவர் திமுக விஞ்ஞான கழக காரனுங்களை விட படு டேஞ்சரான ஆளாகஇருக்கார்.


SS
ஏப் 23, 2024 17:13

ஆனால் நயினார் நாகேந்திரன் ஆட்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4கோடி சட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின் கீழ் வராது. அதை விசாரிக்க மாட்டோம்


சதீஷ்குமார்,அனுப்பானடி மதுரை மாவட்டம்
ஏப் 23, 2024 18:22

நாங்க வச்சதுதான்டா சட்டம். ஓரமா போவியா


rama adhavan
ஏப் 23, 2024 19:14

அப்போ ஆளும் கட்சி ஆட்களிடம் பணம் 2019 ல் இருந்தே பிடி பட்டதற்கு என்ன கணக்கு,, வழக்கு? சொல்லுங்க


Kasimani Baskaran
ஏப் 23, 2024 15:39

இவரது வேண்டுகோளுக்கு எல்லாக்கைதிகளுக்கும் விடுமுறை விட வேண்டும் காவல்த்துறை, நீதித்துறை, விசாரணை அமைப்புக்கள் போன்ற அனைத்துக்கும் தேர்தல் நேரத்தில் விடுப்பு கொடுக்க வேண்டும்


Godfather_Senior
ஏப் 23, 2024 15:36

கேஸை ஆரம்பிக்க விடாமல் இப்படியே ஒரு ரெண்டு வருஷம் அப்புறம் கேஸ் ஆரம்பிச்சவுடனே இன்னும் ரெண்டு வருஷம், பிறகு தண்டனையில் ஒரு ஏழு வருஷம் = ஆக கூடி பதினோரு வருஷம் இப்படியே தள்ள வேண்டியதுதான் ஜாமீன் கிடைக்காது


Balasubramanian
ஏப் 23, 2024 15:20

அடுத்த நீட்டிற்புக்கு முன், தில்லியில் மே 25 ஆம் தேதி வாக்கு பதிவு நடக்க இருக்கிறது! அதற்கு மட்டுமாவது விடுப்பு கொடுங்க, வாக்கு சேகரிக்க போக முடியாது போனாலும் ஓட்டு போடவாவது விடுங்கள் என்று கேட்பாரோ?


subramanian
ஏப் 23, 2024 15:17

அதே சாராயம் குடித்து இரு என்று சொன்னால் என்ன?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை