உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்த கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்த கெஜ்ரிவால் மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்து டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாமின் கேட்டு, விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது.மதுபானக் கொள்கை முறைகேட்டில் நடந்த சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். பிறகு சி.பி.ஐ., அதிகாரிகளும் கெஜ்ரிவாலை கைது செய்தனர். அமலாக்கத்துறை வழக்கில், அவருக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஆனால், சி.பி.ஐ., கைது செய்ததால் அவர் வெளியே வர முடியவில்லை.இந்நிலையில், சி.பி.ஐ., கைது செய்ததை எதிர்த்தும், ஜாமின் கேட்டும் டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., கைதுக்கு நியாயமான காரணம் இல்லை எனக்கூற முடியாது என்றும், ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டு, கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

S.V. Rajalingha Rajah
ஆக 06, 2024 08:14

இந்த அவல நிலைக்கு காரணம் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் அல்ல. நீதிபதிகளின் முன்னுக்கு பின் முரணான தீர்ப்புகளே முக்கிய காரணம். சட்டத்தை வளைத்து அவரவருக்கு உகந்த வகையில் திரித்து பொருள் கற்பித்து தீர்ப்பு வழங்குவதால் தான் இந்த நிலைமை.


அஜய் சென்னை இந்தியன்
ஆக 06, 2024 00:03

தமிழகத்திலும் பல முன்னாள் அமைச்சர் மற்றும் இப்போது ஆட்சியில் இருக்கு பல அமைச்சர்கள் மீதும் பல ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன மற்றும் விசாரிக்காமல் கூட உள்ளன....இதை கொஞ்சம் மத்திய அரசும், சுப்ரீம் கோர்ட், ED யும் கைது நடவடிக்கையும், தீவிர விசாரணை செய்தால் நல்லது. அதை விட்டு விட்டு யாருடன் 2026 கூட்டணி வைக்க வேண்டும் என்று வழக்கை விசாரிக்க விடுவது பொது மக்களுக்கு நல்லது இல்லை. ஆனால் சட்டத்தில் மிக பெரிய ஒட்டையே 1.ஜாமீன் வில் வெளியே வர முடியும், 2.வழக்கை தள்ளி போட முடியும், 3.வழக்கு விசாரணை வை நிறுத்தி வைக்க முடியும், 4.ஜாமீன் வில் வெளியே வந்தது சாட்சிகளை அழிக்க முடியும், 5. அல்லது சாதிகளை பணம் கொடுத்தோ, மிரட்டி யோ சாட்சிகளை மாற்றி வழக்கில் இருந்து குற்றம் அற்றவர் ஆகா விடுதலை பெற்று வெளியே வர முடியும். 6. இதையும் மீறி பொய் கணக்கு, தனது சொத்து இல்லை என்று நிரூபிப்பது, நான் காசு வாங்களை என் பெயரை சொல்லி அவன்/ அவள் வாங்கினால் என்றும் நிரூபித்து வழக்கில் இருந்து தப்பி முடியும். 8. மத்திய ஆளும் அரசு மூலம் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க முடியும். 9. நீதி பதியை மிரட்டி வழக்கு விசாரணை குற்றவாளிக்கு சாதகம் மாக மாற்றி கொள்ள முடியும். 10. இல்லையே MP, MLA மூலம் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி இந்த வழக்கை நிறுத்தி வைக்க முயற்சி செய்ய முடியும். 11. இன்னும் 50 வழி முறைகள் இருக்கலாம் இப்படி சட்டத்தில் 100 ஓட்டைகள் இருக்கும் வரை எந்த ஊழல்வாதிகலை ஒண்ணுமே செய்ய முடியாது. ஆனால் common citizen குற்றம் செய்தால் உடனே கைது, உடனே தண்டனை. இதுதான்...இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இருக்கும் மிக பெரிய சவால்.


krishna
ஆக 05, 2024 22:12

ENGE THUNDU SEATTU. UDAN ORU COMEDY VIDEO PODUNGA UNGA FRIEND KUJLIWAL AVARGALUKKU.SEENDI PAAKKADHINGA NONDI PAAKKADHINGA THONDI PAAKKADHINGA IZHUTHU PAAKKADHINGA ENA.


ஆரூர் ரங்
ஆக 05, 2024 20:09

எதுக்கும் கருணா மாதிரி பாளையங்கோட்டைச் சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் ன்னு பொய் புரட்டுக் கவிதை எழுதி நேரத்தைக் கழிக்கவும்


Rajamani K
ஆக 05, 2024 19:28

இவர் மாற்றத்தை எல்லாம் விட்டு விட்டு, திஹார் பற்றி கட்டுரை எழுதலாம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி