உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா துணை கலெக்டர் தற்கொலை!

கேரளா துணை கலெக்டர் தற்கொலை!

திருவனந்தபுரம்: துணை கலெக்டர் நவீன் பாபு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கேரளா கண்ணனூர் மாவட்டத்தில் துணைக் கலெக்டராக பணியாற்றி வந்தவர் நவீன் பாபு. இவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் வழங்கப்பட்டது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் அவர் பணியில் சென்று சேருவதை முன்னிட்டு, கண்ணனூர் மாவட்டத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.விழாவில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.இந்த நிகழ்ச்சியில் அழைப்பு இல்லாமலேயே வந்து பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவர் திவ்யா, துணை கலெக்டர் நவீன் பாபு மீது தாறுமாறான குற்றச்சாட்டுகளை கூறினார். பலர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டதால் நவீன் பாபு மனம் உடைந்து போனார். இந்நிலையில், இன்று(அக்.,15) நவீன் பாபு அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவர் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். நவீன் பாபு உடலை மீட்டு போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். பஞ்சாயத்து தலைவர் திவ்யா பேசியதால், மனம் உடைந்த நவீன் தற்கொலை செய்து கொண்டதாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Natchimuthu Chithiraisamy
நவ 09, 2024 20:07

கொலை என போலீஸ் துப்பு துலக்க முயற்சி செய்யமுடியுமா ? அதற்கு அரசோ சட்டமோ அனுமதிக்குமா ? சட்டம் காக்கும் என்கிற நம்பிக்கை அழிந்து விட்டது.


Jysenn
அக் 15, 2024 22:50

In the commies kingdom the female species is more lethal than the male.


rama adhavan
அக் 15, 2024 21:34

அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யலாமே?


Sudha
அக் 15, 2024 18:21

அந்த திவ்யாவை சிறைக்கு அனுப்புங்க


sankaran
அக் 15, 2024 15:19

பெண் சுதந்திரம் வேண்டாம்னேன் ...ஆபத்துன்னேன் ...


Ramesh Sargam
அக் 15, 2024 11:58

காரணம் தெளிவாக தெரிகிறது. தெரியவில்லை என்று எப்படி கூறலாம். அந்த பெண்மணிதான் காரணம். அவள் பொது இடத்தில் இப்படி ஒருவர் மீது அவதூறு பேசலாமா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை