உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

மாந்திரீக தடை சட்டத்தை அமல்படுத்த ஐகோர்ட்டில் கேரள அரசு மறுப்பு

கொச்சி : 'கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளை தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்த போவதில்லை' என, உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது.கேரளாவில், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்ற நடவடிக்கைகளால் தொடர் உயிர் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதை தடுக்கும் நோக்கில், 'மாந்திரீகம், பில்லி, சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்பு மசோதா'வை, சட்ட சீர்திருத்த கமிஷன், 2022ல் பரிந்துரைத்தது. இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாது என கேரள அரசு பின்வாங்கியது. இது தொடர்பாக, யுக்திவாடி சங்கம் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மசோதாவை நிறைவேற்ற காலதாமதம் செய்வது ஏன்? என்பது குறித்து பதில் அளிக்கும்படி கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி நிதின் ஜம்தார் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்தது.இதில், 'கடந்த, 2023, ஜூலை 5ல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. 'சட்டசபையில் ஒரு சட்டத்தை இயற்றும்படி கட்டாயப்படுத்தும் அதிகாரம், நீதிமன்றத்திற்கு கிடையாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளது.

கேரள அரசின் பதில் மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

சட்டத்தை இயற்றாமல், மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவற்றை எவ்வாறு அரசு கட்டுப்படுத்தும்? அதுபற்றி, பதில் மனுவில் அரசு குறிப்பிடவில்லை. எனவே, இதுபோன்ற மூடநம்பிக்கைகளை கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை மூன்று வாரத்திற்குள் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 07:44

மயிலிறகால் பிரார்த்தனை செய்து சாம்பிராணி போடுவது மாந்திரீகம்தானே?


ஆரூர் ரங்
ஜூன் 25, 2025 07:40

மாற்றுத் திறனாளிகளின் செவித்திறன் கண்பார்வை, நடை குறைபாடு, கேன்சர் நோயைத்தீர்க்க தேவ வல்லமை CD வாங்குங்கள் எனப் பிரச்சாரம் செய்து பணம் சேர்க்கிறார்கள். அதையும் தடைசெய்ய சட்டம் வருமா?.


Pandi Muni
ஜூன் 25, 2025 07:31

மாந்த்ரீகம், பில்லி சூனியம் எல்லாம் மூட நம்பிக்கையா இருக்கும் போது மனிதன் ஏன் விபத்து தற்கொலை நோய் இவற்றால் சாகிறான் பைத்தியமாகிறான் ஊரை விட்டு ஓடுகிறான். தடை செய்ய வேண்டியது சாராய கடைகளைத்தான்


சண்முகம்
ஜூன் 25, 2025 05:51

மூட நம்பிக்கையால் ஆயிரக்கணக்கில் இறந்தாலும் சட்டம் இயற்ற சட்டசபையை கட்டாயப்படுத்த முடியாது. அறிவற்றவர்களை சாகாமல் ஏதாவது வழியில் காப்பாற்ற கேட்டுக்கொள்ளலாம்


Kasimani Baskaran
ஜூன் 25, 2025 03:46

வேதத்தின் ஒரு பகுதிதான் மாந்திரீகம் போன்ற வித்தைகள் - அவற்றை பொய் என்று சொல்லி ஒதுக்கி விட முடியாது..


sridhar
ஜூன் 25, 2025 07:10

ஆம் , ஒரு காலத்தில் கேரளாவில் மாந்திரிகம், ஏவல் , சூனியம் போன்றவற்றில் சிறந்த மலையாள மந்திரவாதிகள் இருந்தார்கள் . ஆங்கிலேயர்கள் கூட இவற்றை பார்த்திருக்கிறார்கள் . இன்று அந்த கலை அழிந்து போலிகள் தான் இருக்கிறார்கள் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை