உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முஸ்லிம்கள் முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

முஸ்லிம்கள் முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது: கேரள உயர் நீதிமன்றம்

திருவனந்தபுரம்: 'முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் முதல் மனைவியின் சம்மதம் இல்லாமல் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது' என, கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கேரளாவின் கண்ணுார் அரு கே உள்ள கருமத்துார் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஷெரீப், 44. இவர் கடந்த, 2017-ல் காசர்கோடை சேர்ந்த ஆபிதா, 38, என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4rb4kwa1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆனால் ஷெரீப் முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. இதனால் ஷெரீப்பின் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்ய திருக்கரிப்பூர் பஞ்சாயத்து செயலர் மறுத்தார். இதை எதிர்த்து, கேரள உயர் நீதிமன்றத்தில் ஷெரீப் மனு தாக்கல் செய்தார். முஸ்லிம் மத சட்டத்தின்படி இரண்டாவது திருமணம் செய்ய உரிமை உண்டு என்பதால், தன் திருமணத்தை பதிவு செய்ய உத்தரவிடக் கோரினார். இதை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன் அளித்த தீர்ப்பின் விபரம்: அரசியலமைப்பு சட்டத்தில் இருபாலருக்கும் சம உரிமை உள்ளது. ஆண்களுக்கு கூடுதல் அதிகாரம் எதுவும் கிடையாது. தன்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய, 99.99 சதவீதம் பெண்களும் விரும்ப மாட்டார்கள். திருமணத்தை பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வேறு மனைவியர் இருந்தால் அவர்களது விபரங்களை குறிப்பிட வேண்டும். முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு திருமணத்தை செய்யலாம். ஆனால் திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமென்றால் முதல் மனைவியின் சம்மதம் கண்டிப்பாக தேவை. இரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் சம்மதம் தேவையில்லை என குர்ஆனில் கூட கூறவில்லை. மனுதாரர் இரண்டாவது திருமணத்தை பதிவு செய்வதற்கு மீண்டும் பஞ்சாயத்து அலுவலகத்தை அணுகலாம். முதல் மனைவிக்கு நோட்டீஸ் அனுப்பி அவரது கருத்தை கேட்ட பின்னரே அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்பாவி
நவ 06, 2025 18:49

அந்தக் காலத்தில் ஏது கோர்ட்?


ஆரூர் ரங்
நவ 06, 2025 14:36

பலதார மணம் இஸ்லாத்தில் கட்டாயமில்லை. ஒரு ஆப்ஷன் மட்டுமே. போர்களால் விதவைகள் எண்ணிக்கை அதிகமாகி மறுவாழ்வு அளிக்க வேண்டியிருந்தது. மேலைநாடுகளில் கேட்காத பலதார உரிமைகளை இங்கு கேட்பது தவறு. அராஜகம்.


Indian
நவ 06, 2025 11:24

சரியான தீர்ப்பு ..சபாஷ்


Rathna
நவ 06, 2025 11:15

சம்மதமா? அடிதடி நடத்துவான் அப்படியும் முதல் மனைவி படியவில்லை என்றால் வேறு உலகத்துக்கு அனுப்பிவிடுவான். இப்படி ஓவருத்தனுக்கும் ஒரு சட்டம் என்றால் நாடு எங்கே செல்லும். UCC தான் இந்த மாதிரி காட்டான்களுக்கு மருந்து.


Ramesh Sargam
நவ 06, 2025 08:25

இதேபோன்று முஸ்லீம் மனைவிமார்கள், முதல் கணவனின் சம்மதமின்றி 2 வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும். சட்டத்தின் முன் கணவன், மனைவி எல்லோரும் ஒன்றுதானே


பேசும் தமிழன்
நவ 06, 2025 08:05

இந்த எழவு கருமாந்திரத்துக்கு தான் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு நாட்டில் இருக்க வேண்டும் என்றால்.... அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.... இல்லையென்றால் சட்டம் இருக்கும் நாட்டுக்கு போய் கொண்டே இருக்கலாம்.


visu
நவ 06, 2025 11:17

மத ரீதியான சட்டங்களை முறைப்படுத்த வேண்டும் அப்ப பெண்ணும் ஹிந்து ஆணும் மனம் செய்ய விரும்பினால் பதிவு செய்ய முடியாதா


Barakat Ali
நவ 06, 2025 08:02

தெளிவான தீர்ப்பு ......


duruvasar
நவ 06, 2025 07:44

குழப்பமான தீர்ப்பு. முதல் மனைவியிடம் என்றால் 6 வதாக மணந்தால் 5 வது மனைவியிடம் சம்மதம் பெற்றால் போதுமானதுதானே ? கொஞ்சம் விளக்குங்கள். .


Ramesh Sargam
நவ 06, 2025 07:41

இதேபோன்று முஸ்லீம் மனைவிமார்கள், முதல் கணவனின் சம்மதமின்றி 2 வது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டத்தின் முன் கணவன், மனைவி எல்லோரும் ஒன்றுதானே


GMM
நவ 06, 2025 07:28

மத அடிப்படையில் திருமண முறையில் அரசியல் சாசன விதியில் இல்லாத போது கேரளா உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா? திருமண பதிவு மாநில பதிவு துறையா? பஞ்சாயத் செயலரா? சுய வருவாய் ஈட்ட வழக்கறிஞர் தவறான சட்ட விளக்கங்களால் இந்தியா இன்னும் சட்ட ஒருங்கிணைப்பில் இல்லை.


முக்கிய வீடியோ