வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மூலிகை எண்ணெயால் மாலிஷ் ..முதலிடம்
மூணாறு: கேரளாவின் இடுக்கி மாவட்டம் சர்வதேச, 'டாப் லேண்டிங் அக்யூரசி கோப்பை பாராகிளைடிங்' திருவிழா கடந்த 19ல் துவங்கிய நிலையில் இன்று நிறைவு பெறுகிறது.நிறைவு விழாவை, சுற்றுலா துறை அமைச்சர் முகமது ரியாஸ் துவக்கி பேசியதாவது: கேரளாவை சாகச சுற்றுலா மையமாக மாற்றும்போது வாகமண் முக்கிய இடமாகும். அதற்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கேரள சாகச சுற்றுலா சங்கத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். கொரோனாவுக்கு பின் சுற்றுலாவில், சாகச சுற்றுலா மிக முக்கிய இடம் பிடித்தது.இது போன்ற மையங்களுக்கு மட்டும் வரும் பயணியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதற்கான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. எதிர்காலத்தில் சாகச சுற்றுலாவுக்கு பெரும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்தது. அதனால், சாகச சுற்றுலாவின் திறனை திறம்பட பயன்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. டிரெக்கிங், ஹைக்கிங் ஆகிய பாதைகளின் வரைபடம் தயாரிக்கவும் சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
மூலிகை எண்ணெயால் மாலிஷ் ..முதலிடம்