உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளா:விஷமானது மயோனைஸ் 70 பேர் மருத்துவமனையில்அனுமதி

கேரளா:விஷமானது மயோனைஸ் 70 பேர் மருத்துவமனையில்அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சூர்: உணவகத்தில் மயோனைஸ் சாப்பிட்ட வாடிக்கையாளர்கள் 70பேர் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கேரள மாநிலத்தின் மூணுபீடிகை என்னும் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சுமார் 70பேர் வரையில் குழிமந்தி என்ற உணவை சாப்பிட்டு உள்ளனர். அந்த உணவிற்கு சைட் டிஷ் ஆக மயோனைஸ் தரப்பட்டு உள்ளது.இதனை சாப்பிட்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில் மயோனைஸ் உட்கொண்டதே உணவு நச்சுத்தன்மைக்கு காரணம். பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கவலைக்கிடமான நிலையில் இல்லை என கூறினர். சம்பவம் நடந்த கைபமங்கலம் காவல் நிலைய அதிகாரி கூறுகையில் சம்பவம் நடைபெற்ற உணவகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mohan das GANDHI
மே 26, 2024 22:04

MAYONAISE COMES FROM WESTERN COUNTRIES THIS IS NOT INDIAN TRADITIONAL FOOD ALSO MAYONAISE SAUCES CONSIDERED AS JUNK FOOD LIKE BURGER OR ANY OTHER JUNK FOOD MIXTURE SOME TIMES ITS OVERDOSE TURN FOOD POISON? . MOST OF SOME YOUNGSTERS ARE MORE INVOLVED IN WESTERN CULTURE AND COPY EVEN THEIR FOOD THAT THESE PEOPLE DOESNT KNOW THAT IN INDIA WE HAVE VERY GOOD TRADITIONAL FOOD AND NOT VERY EXPENSIVE ALSO


sridhar
மே 26, 2024 21:34

God's own country- battered by rains , epidemics and now man made disasters. Cursed communists regime must end.


Svs Yaadum oore
மே 26, 2024 21:32

இந்த மயோனைஸ் என்பது மிக சுலபமாக கெட்டு போகும் நச்சுத்தன்மை ...இதற்கு வெளி நாடுகளில் மிக கடுமையான தரக்கட்டுப்பாடு உண்டு ..இந்தியாவில் அதுபோன்று எதுவும் கிடையாது .இங்குள்ளவன் வயிறு இரும்பால் செய்தது....பழைய ஊசிப்போன மயோனைஸ் தின்னட்டும் என்று கடைக்காரன் கொடுத்துவிட்டான் ..... .....கேரளா படித்து முன்னேறிய மாட்டுக்கறி தின்னும் மாநிலம் ......அதனால் வெளிநாட்டு கலாச்சாரம் ....அதனால்தான் உலகில் எந்த வியாதியும் கேரளாவுக்கு முதலில் வரும் .. விடியல் திராவிடனுங்களுக்கு கூட்டணி கட்சி ஆளும் மாநிலம் கேரளா....விடியல் ஊரெங்கும் பிரியாணிக்கடை , நடுராத்திரி பிரியாணி என்று மாட்டுக்கறி தின்னும் மாநிலமாக இங்கும் மாற்றி வருகிறது ..


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ