உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏமன் கிளர்ச்சிப்படை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா!

ஏமன் கிளர்ச்சிப்படை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பிடியில் இருக்கிறார் என டில்லியில் இருக்கும் அந்நாட்டு துாதரகம் விளக்கம் அளித்துள்ளது.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svhnqqno&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 2017 ம் ஆண்டு ஏமனில் நர்சாக பணியாற்றிய போது, அந்நாட்டை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அது முதல் அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றங்கள், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன. இதையடுத்து, அந்த நாட்டின் அதிபருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. அதை நிராகரித்த அந்நாட்டு அரசு, ஒரு மாதத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டதாக தகவல் வெளியாகின. 'நர்ஸ் நிமிஷா பிரியாவை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்' என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பிரியாவை மீட்க அவரது தாயார் போராடி வருகிறார். இந்நிலையில், டில்லியில் இருக்கும் ஏமன் நாட்டு தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியா, அரசுக்கு எதிராக போரிட்டு வரும் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பிடியில் இருக்கிறார். அதிபர் ரஷத் அல் அலிமி நிர்வாகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜன 07, 2025 04:10

தலால் ஆப்தே மஹதி இவரை பற்றி தொடக்கத்திலிருந்தே தலால் ஆப்தே மஹதியை கொன்றதால் மரண தண்டனை பெற்றார் என்ற செய்தி தான் வருகிறது....ஏன் அவரை கொன்றார், பாலியல் பலாத்காரம் செய்ய வரும்போது தற்காப்புக்காக கொன்றாரா, மஹதி ஒரு தீவிரவாதியா? ஒன்றும் புரியவில்லை


Anu
ஜன 19, 2025 12:18

நீங்கள் கூறுவது தான் உண்மை ஒருவகையில் இவரிடம் உதவி பெற்ற நிமிஷம் பிரியா அந்த உதவியை காரணம் காட்டி இவரை அடைய நினைத்துள்ளான் அந்த துரோகி வெளிநாட்டிற்கு சென்றது தவறு அதுவும் கணவனையும் குழந்தையும் விட்டு தனியாக அங்கு இருக்க முடிவு செய்து அதைவிட மிகப்பெரிய தவறு அடுத்த ஆண் தன்னிடம் தவறு செய்யமாட்டான் என்று நம்பியது மிகப்பெரிய தவறு இவரின் கணவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என் மனைவி தன்னை காத்துக் கொள்ள அவனை கொலை செய்துள்ளார் ஒருவேளை அவன் மீது விருப்பம் இருந்தால் அவனோடு வாழ்ந்து இருக்கலாம் அல்லவா என்று அவரை நம்பிக்கையை நாம் இதில் பார்க்க வேண்டும் அது மட்டும் இல்லாமல் என் மனைவி மீது இப்பொழுது எனக்கு அதிக அன்பு இருக்கிறது அவள் செய்த இந்த கொலையினால் என்று கூறி இருக்கிறார் அவள் செய்த தவறு ஆனால் என் குழந்தைக்காகவும் எனக்காகவும் என்று அவள் வாக்குமூலம் அளித்துள்ளாள் என்று கூறியுள்ளார்


தமிழன்
ஜன 06, 2025 23:21

குமார் கும்சி போன்ற அறிவற்ற மடையர்களுக்கு மரியாதையென்றால் என்னவென்றே தெரியாமல் மதத்தை புகுத்தி கருத்து போடுவதுதான் வழக்கம் போல?? நான் எங்கடா மதத்தை இழுத்தேன்? கொஞ்சமாவது அறிவே கிடையாதா? தப்பு யார் செய்தாலும் தண்டனை அனுபவித்துத் தான் ஆக வேண்டும் இவள் இந்தியாவை சேர்ந்தவள் எனபதற்காக இந்த தப்பை நியாயப்படுத்த முடியாது இது குறைந்தபட்ச அறிவுள்ள மண்டையில் ஏறினால் நல்லது


அப்பாவி
ஜன 06, 2025 20:17

இனிமே ஈசி. துட்டு வெட்டுனா மூர்க்கன் உட்டுருவான்.


Balasri Bavithra
ஜன 06, 2025 19:24

செய்தி மீடியா எல்லாம் இந்த பெண் ஒரு அப்பாவி போல,அவரின் குற்றத்தை மறைத்து செய்தி / கதை சொல்கிறது ..கொன்று , பிறகு அந்த உடம்பை துண்டு துண்டு ஆக அறுத்து ,தண்ணீர் தொட்டியில் மறைத்து தப்பி உள்ளார் இந்த அப்பாவி


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 06, 2025 19:16

சவுதி ஆதரவில் பெரும்பாலான ஏமன் பகுதியை ஆள்வது அங்கீகரிக்கப்பட்ட அரசு. நர்ஸ் அடைக்கப்பட்டுள்ள சிறை ஈரான் ஆதரவில் செயல்படும் ஹுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமன் தலைநகர் சனாவில் இருக்கிறது. எனவே அதிபரின் அதிகாரம் சனாவில் செல்லுபடியாகாது. எனவே நர்ஸ் மீது விதிக்கப்பட்ட தண்டனையை ஹூதி நிறைவேற்றாது. ஈரான் கேட்டுக்கொண்டால் நர்ஸ் விடுவிக்கப்படலாம். ஆனால் அந்த நர்ஸை அவர்கள் சீரழிக்காமல் அல்லது உயிருடன் விட்டுவைத்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. இந்தியா ஈரான் மூலம் அனுகுவதுதான் சரி. மோடி அரசின் முயற்சியும், இறைவன் கருணையும் இருந்தால் மட்டுமே அப்பெண் உயிர் தப்பிக்க முடியும்.


Duruvesan
ஜன 06, 2025 16:50

நேத்து வரை மன்னர் நீதி எல்லாம் ஒரு மாதத்தில் மரணம் னு சொல்லிட்டு இன்னைக்கு வேற மாதிரி, மூர்கனை நம்பும் மோடியை என்ன சொல்வது, கேவலம், ithe


Kumar Kumzi
ஜன 06, 2025 17:22

கூமுட்ட இதுக்கு ஏன் மோடியை இழுக்குற


visu
ஜன 06, 2025 16:45

ஏமன் தலைநகர் சனா வாம் அதிபர் ஒருவராம் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிடுவாராம் ஆனால் கைதி அவர் கட்டுப்பாட்டில் இல்லையாம் நம்பிட்டோம்


MUTHU
ஜன 06, 2025 17:33

கைதியை விடுதலை செய்ய ஈரான் உதவி நாடப்படுகின்றது என்ற செய்தி வந்த பொழுது இந்த சந்தேகம் எழுந்தது. பொதுவாக ஏமன் ஆட்சியாளர்கள் சவுதியின் கையாட்கள். பின்பு ஏன் ஈரானிடம் உதவி கேட்க வேண்டும் என்ற கேள்வி வந்தது.


visu
ஜன 06, 2025 21:33

ஹௌதி தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் சனா உள்ளது என்கிறார்கள் .தண்டனை வழங்குவது ஏமன் நீதிமன்றம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத ஹௌதிகள் ஏன் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் .ஈரான் தான் ஹௌத்திக்களை பின் நின்று இயக்குவது அதனால் அவர்கள் நினைத்தால் அவரை விடுவிக்க முடியும் ஏமன் அரசு சவூதி ஆதரவு நிலை


தமிழன்
ஜன 06, 2025 16:37

தப்பு யார் செய்தாலும் தப்புதான் இது தவறு அல்ல திருத்திக்கொள்ள விச ஊசி போட்டு கொன்று பிணத்தை துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறாள் இது மனித குலமே வெட்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனமான குற்றம் கேரளாவுக்கு மருத்துவத்துறையில் கண்டம் உள்ளது இங்கு மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டி அவமானப்பட்டானுகள் இங்கு இந்த கதை


Kumar Kumzi
ஜன 06, 2025 17:26

காட்டுமிராண்டித்தனம்னா அது மூர்க்கன் தானே மத பாசத்துல பொங்குறியோ


Kumar Kumzi
ஜன 06, 2025 16:05

மனித உருவில் நடமாடும் இந்த கொலைகார காட்டுமிராண்டிகளை இஸ்ரேல் அழித்தொழிக்கணும்


Barakat Ali
ஜன 06, 2025 15:08

கேரளா நர்ஸின் நிலை பரிதாபத்துக்குரியது... தவறிழைத்தவரல்ல என்றால் அவரை இறைவன் காப்பாற்றட்டும் .... இவரைப்போலத்தான் தமிழனும் திராவிட மாடலின் பிடியில் சிக்கி சுய அடையாளத்தை இழந்தான் ....


Senthoora
ஜன 06, 2025 15:48

மயக்க ஊசி போட்டு அவரிடம் இருந்து தப்ப பார்த்தார். ஓவர் டோஸ் போய்ட்டான். இவங்க அவரை துண்டு, துண்டாக வெட்டி வீசியதுதான் அகோரம்.


raja
ஜன 06, 2025 15:56

நிதர்சன உண்மை தோழரே இதுபோல் எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தமிழகம் கண்டிப்பாக திராவிட கம்பெனியின் பிடியில் இருந்து விடுபடும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை