உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

இன்று கேரளாவில் கன மழைக்கு வாய்ப்பு: 3 மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று, கோழிக்கோடு, கண்ணனுார் மற்றும் காசர்கோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதத்தில் தான் தென்மேற்கு பருவமழை காலம். செப்டம்பர் மாத இறுதியில் பருவமழை தீவிரம் குறைந்து விடைபெற்றுவிடும். ஏற்கனவே, வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானில், பருவமழை விடைபெற்து விட்டது.அப்படிஇருக்கும்போது, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக, கேரளா மற்றும் தென்இந்தியாவின் சில பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கன மழை தொடர்ந்தால், கேரள மாநிலத்தில் கூடுதலாக 15லிருந்து 20 நாட்களுக்கு மழை தொடரும்.வானிலை ஆய்வின்படி, ஜூன் 1 முதல் செப்டம்பர் 23 வரையிலான காலத்தில் கேரளாவில் 13 சதவீத மழைப்பொழிவு குறைவாக இருந்தது.1,957 மி.மீ., பெய்ய வேண்டிய மழை அளவு, 1,709 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது.ஆழப்புழா, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. மற்ற 10 மாவட்டங்களிலும் போதுமான மழைப்பொழிவு இருந்தது.கண்ணனுார் மாவட்டத்தில் அதிகமான மழையளவு பதிவாகி உள்ளது. இங்கு வழக்கத்தைவிட 15 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியது. இடுக்கி மாவட்டத்தில், 33 சதவீத மழை பற்றாக்குறை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி