உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதைப்பொருள் வழக்கு; கைதான அஜித் பட நடிகர் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிப்பு

போதைப்பொருள் வழக்கு; கைதான அஜித் பட நடிகர் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: போதைப் பொருள் வழக்கில், மலையாளப் பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்தனர். சாக்கோ தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சமீபத்தில் நடிகர் அஜித் நடித்து வெளியான ' குட் பேட் அக்லி' படத்தில் நடித்து இருந்தர் மலையாள பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் மீது வின்சி அலோஷியஸ் என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=krlg275j&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேலும் டாம் சாக்கோ மீது போதைப்பொருள் பயன்படுத்தியது, அதனை தூண்டியது மற்றும் கிரிமினல் சதி செய்ததாக போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்காக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரிக்க போலீசார் சென்றனர். ஆனால், போலீசை பார்த்ததும் சாக்கோ ஹோட்டலின் மூன்றாவது மாடியில் உள்ள ஜன்னல் வழியாக இரண்டாவது மாடியில் குதித்து அங்கிருந்து நீச்சல் குளத்தில் தாவி படிக்கட்டு வழியாக தப்பி ஓடிவிட்டார். இந்த காட்சிகள் ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சாக்கோவுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். இதன்படி இன்று அவர் தனது வழக்கறிஞர்களுடன் வந்து விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 32 கேள்விகளை கேட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அவரது மொபைல் போனை வாங்கி ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஷைன் டாம் சாக்கோவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.அவர்கள் மேலும் கூறியதாவது: ஹோட்டலுக்கு வந்தது போலீசார் என தெரியாது. யாரோ தன்னை தாக்க வந்ததாக நினைத்து தப்பித்து ஓடியதாக சாக்கோ கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதனிடையே, மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Karthik
ஏப் 19, 2025 23:49

ஐயா ஊடகங்களே போதை பொருள் வழக்கில் அஜித் பட நடிகர் கைது னு போடுறீங்க.. அஜித் பேரை எதுக்கு பயன்படுத்துறீங்க? அப்படிங்கறது தான் எனக்கு இன்னும் புரியல. இந்த சம்பவத்துக்கும் நடிகர் அஜித்துக்கும் என்ன தொடர்பு??


Yasararafath
ஏப் 19, 2025 22:07

இது நம்புற மாதிரி இல்லை.


अप्पावी
ஏப் 19, 2025 20:07

ஜாமீன் வாங்கி வெச்சுக்கிட்டுதான் போதை மருந்து சாப்பிடப் போயிருப்பார். சாரூக் கான் பையன் மாதிரி நிரபராதியா வெளியே வருவார்.


என்றும் இந்தியன்
ஏப் 19, 2025 19:55

பணம் கொடு ஜாமீன் ரெடி - திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் போலீஸ் ஏவல் துறை


m.arunachalam
ஏப் 19, 2025 19:31

ஜாமீன் எப்பொழுதும் ரெடி .


Sampath Kumar
ஏப் 19, 2025 16:41

தமிழ் நாட்டில் போதை அதிகம் எண்டு சொன்ன அறிவு ஜீவிகள் இந்த போதைக்கு என்ன சொல்லவர்கள் மொத்தத்தில் எல்லா மாநிலத்திலும் போதை விரிந்து கிடக்கிறது புரிகின்றது போதை வியாபாரிகள் அரசியில் வியாதிகளின் உதவி உடன் வியாபாரம் காண ஜோராக நடை பெறுகிறது


இவன்
ஏப் 19, 2025 17:44

ஆமாம் அறிவு ஜீவி அங்க ஒரு நடிகன் மேல வழக்கு இங்க பள்ளிக்கூடம் படிக்கிற பையன் கூட வச்சிருக்கான்


KRISHNAN R
ஏப் 19, 2025 16:17

அஹா அகா..


சமீபத்திய செய்தி