உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் போட்டது ‛‛ஆர்டர் : எய்ம்ஸ் டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

சுப்ரீம் கோர்ட் போட்டது ‛‛ஆர்டர் : எய்ம்ஸ் டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

புதுடில்லி: போராட்டத்தை கைவிட்டு டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுபரீம் கோர்ட் உத்தரவைத் தொடர்ந்து டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் பணிக்கு திரும்புவதாக அறிவித்து உள்ளனர்.கோல்கட்டாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. நீதியும், மருத்துவமும் தடைபடக்கூடாது எனக்கூறியிருந்தனர்.இதனையடுத்து டில்லி எய்ம்ஸ் டாக்டர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பணிக்கு திரும்ப வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புகிறோம். நாட்டு நலன் கருதியும், மக்களுக்காகவும் எய்ம்ஸ் மருத்துவமனை ரெசிடென்ட் டாக்டர்கள் 11 நாட்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புவார்கள். கோல்கட்டா விவகாரத்தை விசாரணை நடத்தியதற்காகவும், டாக்டர்கள் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுத்ததற்காக உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.அதேபோல் டில்லியில் உள்ள ஆர்எம்எல் மருத்துவமனை டாக்டர்கள் சங்கமும் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jayaraman K
ஆக 22, 2024 20:45

THEN WHY COURTS ARE CLOSED FOR DUSSEHRA HOLIDAYS (10 DAYS) AND SUMMER VACATIONS (40 DAYS)? MY ACCIDENT CASE IS STILL GOING ON IN DISTRICT COURT FOR SINCE 2007. WHEN WE WILL GET JUSTICE.?


ganapathy
ஆக 23, 2024 02:09

நீங்க உயிருடன் இருப்பதால் நீதி கிடையாது போலும் .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை