உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

நாய்களுக்கு வீட்டில் தயாரித்த சுவையான உணவு டோர் டெலிவரி: கேரளாவில் புது முயற்சி சக்சஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரின் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர் டெலிவரி செய்து வருகிறது. இந்த புது முயற்சி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.தற்போது ஆன்லைன் விற்பனை நிறுவனம் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த காலத்தில் பைகளை தூக்கி கொண்டு கடைக்கு சென்று வாங்கி வரும் முறை, தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மலையேறி போய்விட்டது. வீட்டில் இருந்தே மொபைல் போனில் ஆர்டர் செய்து காய்கறிகள், மளிகை சாமான்களை மக்கள் வாங்கி வருகின்றனர்.கேரளா மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒரு படி மேலே சென்று யோசித்துள்ளது. வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்களுக்கு ஆர்டரின் பெயரின் வீட்டில் தயாரித்த சுவையான உணவை டோர்டெலிவரி செய்து வருகிறது. இந்த ''கேஸ் டாக் புட்'' ஸ்டார்ட் அப் நிறுவனம் நண்பர்கள் சாரங் ஸ்ரீதர் மற்றும் கோவிந்த் ஆகியோரால் நிறுவப்பட்டு உள்ளது.ஒவ்வொரு நாயின் ஊட்டச்சத்து தேவைகளுக்கும் ஏற்ப வீட்டில் சமைத்த உணவுகளை வழங்குகிறது. இருவரும் தங்கள் சொந்த செல்லப்பிராணிகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் கவனித்தபோது, இந்த யோசனை வந்துள்ளது. இது குறித்து ஸ்டார்ட் அப் நிறுவனம் உரிமையாளர் கோவிந்த் கூறியதாவது: நாங்கள் கால்நடை மருத்துவமனைகளுக்கு அடிக்கடி வருபவர்களாக இருந்தோம்.நாய்களுக்கு ஏன் புதிய, சமச்சீரான உணவு கொடுக்கக்கூடாது? என்று நாங்கள் யோசித்தோம். கால்நடை மூத்த டாக்டர்கள் உதவியுடன், 30 வெவ்வேறு இனங்களில் தங்கள் சமையல் குறிப்புகளை சோதனை செய்தோம். இயற்கை மருத்துவ டாக்டர் அபிஜித் கர்மாவின் ஆதரவுடன், இப்போது தினமும் 25-30 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறோம். நாங்கள் நாய்களை மூன்று அளவுகளாக வகைப்படுத்துகிறோம். சிறியது, நடுத்தரமானது மற்றும் பெரியது. காலையில் சமையல் தொடங்கி, பிற்பகல் 3 மணிக்குள் 15 கி.மீ சுற்றளவில் டெலிவரி செய்து வருகிறோம்.உணவு 100 சதவீதம் இயற்கையானது, சுகாதாரமானது. இந்த வகையான உணவுமுறை ஒரு நாயின் ஆயுட்காலத்தை மேம்படுத்த உதவுகிறது. நம்மைச் சுற்றி நிறைய வாய்ப்புகள் உள்ளன.கோட்டயம் போன்ற ஒரு சிறிய நகரத்தில் இதுபோன்ற ஒரு முயற்சியை நடத்துவதில் சவால்கள் இருந்தபோதிலும், சமூக ஆதரவு வலுவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தற்போது, ஆர்டர்கள் வாட்ஸ்அப் வழியாக பெறப்பட்டு டோர்டெலிவரி செய்யப்படுகிறது. அடுத்த கட்டமாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தி கொச்சி மற்றும் பெங்களூருக்கு சேவையை ஸ்டார்வ் அப் நிறுவனம் விரிவுப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பிரேம்ஜி
ஜூலை 13, 2025 07:30

நல்ல முயற்சி! மக்கள் மேலும் சோம்பேறியாகி டாக்டர்களை பணக்காரர்கள் ஆக்க மனமார வாழ்த்துகிறேன்!


என்றும் இந்தியன்
ஜூலை 12, 2025 18:34

அப்போ வெளி உணவை அமேசான்........ மூலம் ஆர்டர் செய்யும் எல்லா மக்களும் இந்த நாய் எண்ணத்தில் மனித உருவில் இருப்பவர்கள்


ramesh
ஜூலை 12, 2025 17:11

எந்த நாய் குட்டியாக இருந்தாலும் நாம் வீட்டிலே சாப்பிடும் சாப்பாட்டை கொடுத்து பழகினால் அதை தான் சாப்பிடும் . தேவை இல்லாமல் கடையில் விற்கும் pedigree போன்ற உணவுகளை வாங்கி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை


KRISHNAN R
ஜூலை 12, 2025 14:14

ஓவர் தான்... சோம்பல்... அதிகம் ஆகிவிட்டது