உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா

குமாரசாமி, பசவராஜ் பொம்மை எம்.எல்.ஏ., பதவி ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு:மத்திய அமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ., பதவியையும்; மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவியையும் ராஜினாமா செய்தனர்.இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய அரசியல் கட்சிகள், தகுந்த வேட்பாளர்கள் கிடைக்காததால், பெரும் தலைவர்களை களமிறக்கின.* அனைவரும் வெற்றிபா.ஜ., -- ம.ஜ.த., காங்கிரஸ் என மொத்தம் மூன்று எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.எல்.சி., ஆகியோர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டனர். இவர்கள் அனைவரும் வெற்றி பெற்றனர்.அதாவது சென்னப்பட்டணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., குமாரசாமி மாண்டியாவிலும்; ஷிகாவி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் பொம்மை ஹாவேரியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்கள் இருவருமே முன்னாள் முதல்வர்கள்.மேலும், சண்டூர் காங்., - எம்.எல்.ஏ., துக்காராம், பல்லாரியிலும்; பா.ஜ., - எம்.எல்.சி., கோட்டா சீனிவாச பூஜாரி, உடுப்பி - சிக்கமகளூரிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர் சட்ட மேலவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவார்.* கடிதம்இந்நிலையில், துக்காராம் நேற்று( 14.06.2024) எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். குமாரசாமி, பசவராஜ் பொம்மை ஆகியோர், சட்டசபை சபாநாயகர் காதரிடம் இன்று(15.06.2024) ராஜினாமா கடிதம் அளித்தனர்.இதே வேளையில், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் பதவி கிடைத்ததற்கு, குமாரசாமிக்கு, சபாநாயகர் வாழ்த்து தெரிவித்தார்.மேலவை தலைவர் பசவராஜ் ஹொரட்டியிடம், கோட்டா சீனிவாச பூஜாரி, எம்.எல்.சி., பதவி ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதன் மூலம், அவர், தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் இழந்தார். எம்.எல்.ஏ.,வாக இருந்த நான், லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டதால், ஏதாவது ஒரு பதவியை மட்டுமே வைத்திருக்க வேண்டும். எனவே எம்.எல்.ஏ., பதவியிலிருந்து ராஜினாமா செய்தேன். சென்னப்பட்டணா இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பின்னர் பார்க்கலாம். - குமாரசாமி, மத்திய அமைச்சர், கனரக தொழில் துறைஷிகாவி மக்கள், என்னை தொடர்ந்து நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்தனர். இதனால் தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்ய முடிந்தது. அவர்களுக்கு என் நன்றி. எம்.பி.,யாகவும் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகளை செய்வேன். - பசவராஜ் பொம்மை, எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Veera
ஜூன் 16, 2024 10:31

One Nation One election may ensure election for LS


Bhaskaran
ஜூன் 16, 2024 08:02

இடைத்தேர்தல் மக்கள் வரிப்பணம் வீண்


சூரியா
ஜூன் 16, 2024 07:58

இவிங்க ரேஞ்சுக்கு எம்.பி, எம்.எல்.ஏ, கவுன்சிலர், ந்னு நாலு பதவி வகிக்க முடியுமே.... இவிங்க ராஜினாமா செய்த இடங்களுக்கு மறுபடி மக்கள் வரிப்பணத்தில் தண்டச் செலவு தேர்தல். சட்டமேதைகள் எழுதி வெச்ச தெண்டச் செலவு.


Ramesh Sargam
ஜூன் 15, 2024 20:35

மாநிலத்தில் சுருட்டியது போதும் என்று, மத்தியில் சுருட்ட சென்றுள்ளனர்.


RAJ
ஜூன் 15, 2024 20:08

கனவான்களே, மக்களின் வரி பணத்தை சூறையாடுகிறீர்கள். இரண்டு தொகுதிகளில் நிற்கும் முறையை ஒழிக்கவேண்டும். இல்லாவிட்டால், மன்றத்தேர்தலுக்கு மறுதேர்தலுக்கு ஆகும் செலவை ராஜினாமா செய்தவர்கள் ஏற்கவேண்டும். அதேபோல், ஒரு பதிவில் இருக்கும்போதே, இன்னொரு பதவிக்கு போட்டியிடும் முறையை ஒழிக்கவேண்டும் ஜெய்ஹிந்..


Sivakumar
ஜூன் 15, 2024 19:28

ராகுல் ஏதாவது ஒரு இடத்தில் ராஜினாமா செய்யணும், இடைத்தேர்தல் வரும்னு சொன்னவுடனே பொங்கியவர்கள் எல்லாரும் இப்போ மௌனவிரதம் இருக்கிறாங்களோ


ஆரூர் ரங்
ஜூன் 15, 2024 18:56

எதிர்க்கட்சியாக சரியாக செயல்பட முடியாமல் திண்டாடுவதற்கு பதில் மத்தியில் ஆளும் கட்சி எம்பி யாக இருப்பதே மேல். அன்றாட கேன்ட்டீன் வாழ்க்கை வெறுத்துப் போயிருக்கும்.


என்றும் இந்தியன்
ஜூன் 15, 2024 18:40

வேடிக்கையென்னவென்றால் எம் எல் ஏ பென்ஷன் எம்பி பென்ஷன் ரெண்டும் கிடைக்கும் இந்த கழுதைகளுக்கு ஆனால் நாம் ஆஃபீசர் மேனேஜர் ஜெனரல் மேனேஜர் டைரக்டர் என்று இருந்தாலும் கடைசியில் என்ன பதவியோ அதற்கு மட்டும் தான் பென்ஷன் கிடைக்கும்???ஏன் ஒவ்வொரு பதவியிலும் நான் எம் எல் ஏ எம்பி போலவே 5 வருடம் இருந்தேனே அந்த எல்லா பதவிக்கும் ஒவ்வொரு பென்ஷன் என்று 5, 6 பென்ஷன் கொடுக்கவேண்டியது தானே???இது இந்திய கூமுட்டை சட்டம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை